கிராமங்களில் பசுமை வீடு திட்டம் அறிவிப்பு இல்லாததால் அதிருப்தி

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை ஒன்றியத்தில் நடப்பு நிதியாண்டுக்கான பசுமை வீடு திட்டத்துக்கான அறிவிப்பு வராததால், காத்திருக்கும் பயனாளிகள் அதிருப்தியில் உள்ளனர்.பொருளாதார வசதியில்லாத மக்களின் குடும்பங்களுக்கான திட்டமாக 'பசுமை வீடு' திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில், பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள மக்களின் பட்டியல் ஊராட்சி வாரியாக தேர்வு செய்யப்படுகிறது.
தொடர்ந்து இத்திட்டத்தில் பயன் பெற தகுதியுள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வீடில்லாத பலருக்கும் இத்திட்டம் பயன் அளிக்கிறது.திட்டத்தில், ஒவ்வொரு பயனாளிக்கும், 2.10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதில், சூரிய சக்திக்கான தொகை, 30 ஆயிரம் ரூபாய், வீட்டிற்கான கட்டுமானத் தொகை, ரூ.1.80 லட்சம் என பிரித்து வழங்கப்படுகிறது.அரசு கட்டுமானத்துக்கு வழங்கும் தொகையை அதிகரிக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில், பிப்., மாதம் நடந்த மாநில பட்ஜெட் கூட்டத்தில், பசுமை வீடு கட்டுமானத்துக்கு, 2.10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
நடப்பாண்டில், ஒன்றிய அதிகாரிகள், 82 பயனாளிகளை தேர்வு செய்து தயாராக வைத்திருக்க, ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியது. நிதியாண்டு துவங்கியும், திட்டத்தை துவங்குவது குறித்தும், பயனாளிகளை உறுதிப்படுத்துவது குறித்தும் அரசு அறிவிக்கவில்லை.திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் பணிகளை துவக்க, கடனுதவி பெற்றுள்ள மக்களும் வேதனையோடு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X