பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை சாகுபடி விரிவாக்க திட்டம் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

ஆனைமலை:

ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகள், அரசு மானியத்தில் புதிதாக தென்னை நாற்றுகள் நடவு செய்ய, வேளாண் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும் புதியதாக தென்னை சாகுபடி செய்ய, தென்னை வளர்ச்சி வாரியம் மானியம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தை வேளாண்துறை மூலம், தென்னை வளர்ச்சி வாரியம் செயல்படுத்துகிறது.ஆனைமலை வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்து, மானியத்தில் தென்னை நாற்றுகள் நடவு செய்ய, விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அழைப்பு விடுத்து உள்ளனர்.வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:தென்னை வளர்ச்சி வாரியம், சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டத்தின் கீழ், மானியம் வழங்கப்படுகிறது. திட்டத்தின் கீழ், ஒரு ஹெக்டேருக்கு, 175 மரங்கள் நடவு செய்ய வேண்டும்.நெட்டை ரகம் நடவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு, 6,500 ரூபாய்; வீரிய ஒட்டு ரகம் ஹெக்டேருக்கு, 6,750 மற்றும் குட்டை ரகம் ஹெக்டேருக்கு, 7,500 ரூபாய் அரசு மானியம் வழங்குகிறது. ஆண்டுக்கு ஒரு தவணை என, இரண்டு தவணைகளாக மானியம் வழங்கப்படும்.ஓராண்டுக்குள் தென்னங்கன்றுகள் நடவு செய்த விவசாயிகளும், புதியதாக நடவு செய்யும் விவசாயிகளும் இத்திட்டத்தில் மானியம் பெறலாம்.சிட்டா, அடங்கல், வங்கி புத்தக நகல், புகைப்படம், அங்கீகரிக்கப்பட்ட தென்னை நாற்றுப்பண்ணை தென்னங்கன்றுகள் வாங்கிய ரசீது உள்ளிட்டவையுடன், ஆனைமலை வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X