பொது செய்தி

தமிழ்நாடு

மண் வள அட்டை வழங்க வலியுறுத்தல்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், வேளாண்துறை சார்பில், மண் பரிசோதனை செய்து, மண் வள அட்டை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், பல்வேறு தன்மையுடைய மண் அடுக்குகள் உள்ளன. ஒவ்வொரு வகையான மண்ணிலும் விளையும் பயிர் ரகங்கள் மற்றும் உர மேலாண்மை குறித்து தெரியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மண் பரிசோதனை செய்த பின்னரே சாகுபடி மேற்கொள்ள வேண்டும் என்றாலும், நடைமுறை சிக்கலால், பெரும்பாலான விவசாயிகள், மண் பரிசோதனை செய்வதில்லை.மண் பரிசோதனை செய்யாவிட்டால், மண்ணிலுள்ள தழை, மணி, சாம்பல் சத்து, கால்சியம், சல்பர், மாங்கனீசு, துத்தநாகம், இரும்பு, போரான் உட்பட 16 வகையான நுண்ணுாட்ட சத்துகளின் அளவு தெரியாது.வளம் தெரியாமல், அதிகளவு உரங்களை பயன்படுத்தி, ஒவ்வொரு சாகுபடியின் போதும், சாகுபடி செலவு அதிகரித்து வருகிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு திட்டத்தின் கீழ், வட்டார வாரியாக, விளைநிலங்களில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மண் பரிசோதனை செய்யப்பட்டது.ஒரு சர்வே எண்ணுக்கு ஒரு மாதிரி என்ற அடிப்படையில், கிராமங்களில், வேளாண்துறை சார்பில், பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இத்திட்டத்தில், குறைந்தளவு விவசாயிகளுக்கு மட்டும், மண் பரிசோதனை செய்யப்பட்டு, மண் வள அட்டை வழங்கப்பட்டது.அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறும் வகையில், திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.அதன்படி, வட்டாரவாரியாக, நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம், பரிசோதனை செய்து, பரிந்துரைகளை வேளாண்துறையினர் வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X