சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சகோதரி திருமணத்தில் சோகம் விபத்தில் தம்பி, நண்பர் பலி

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
 சகோதரி திருமணத்தில் சோகம்  விபத்தில் தம்பி, நண்பர் பலி

திருப்பூர்: திருப்பூரில், சகோதரியின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க, பைக்கில் சென்ற தம்பியும், அவரது நண்பனும் விபத்தில் சிக்கி பலியாகினர்.திருப்பூர், காங்கயம் ரோடு, குன்னாங்கல்காட்டை சேர்ந்தவர் கரீம், 18. பனியன் தொழிலாளி. இவரது சகோதரிக்கு நேற்று திருமணம் நடக்க இருந்தது. இது தொடர்பான வேலைகளை, கரீம் நேற்று முன்தினம் இரவு செய்து கொண்டிருந்தார். திருமண மண்டபத்துக்கு வந்த, திருப்பூர், பெரியதோட்டத்தை சேர்ந்த நண்பர் கரண்ராஜாவை, 19 அழைத்து கொண்டு டூவீலரில், கரீம் சென்றார். அப்போது, காங்கயம் ரோட்டில், மாநகராட்சியின் தெருவிளக்கு பழுதுபார்க்கும் வாகனத்தின் மீது டூவீலர் மோதியது.இதில், கரீம், கரண்ராஜா அதே இடத்தில் இறந்தனர். திருப்பூர் தெற்கு போலீசார், சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் கூறுகையில், 'விபத்தில் இறந்த, இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. அதிவேகத்தில் வண்டியை ஓட்டி, மாநகராட்சி வாகனம் மீது மோதியுள்ளனர். மாநகராட்சி வாகன டிரைவரிடம் விசாரித்து வருகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X