பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் மாவட்டத்தில், நேற்று அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்தது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் கடந்த, ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழை நிலவரம் (மி.மீ.,) : கரூர், 4.1, அரவக்குறிச்சி, 5, அணைப்பாளையம், 5, க.பரமத்தி, 3, குளித்தலை, 4, தோகமலை, 12, கிருஷ்ணராயபுரம், 6.4, மாயனூர், 6, பஞ்சப்பட்டி, 5.4, பாலவிடுதி, 4.1 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 4.58 மி.மீ., மழை பதிவானது.

* திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 161 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 50.82 அடியாக இருந்தது. அணையில் இருந்து, 11 கன அடி தண்ணீர் வெளியேறியது.


* மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 9,784 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில், 9,364 கன அடி தண்ணீரும், இரண்டு கிளை வாய்க்காலில், 420 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X