பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் சார்பில் கொரோனா விழிப்புணர்வு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கரூர்: க.பரமத்தி போலீஸ் ஸ்டேஷன் சார்பில், கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு முகாம், தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் நடந்தது. வைரஸ் தொற்றிலிருந்து எப்படி பாதுகாத்து கொள்வது என்பது குறித்த விளக்க புகைப்பட கண்காட்சியை, இன்ஸ்பெக்டர் ரமாதேவி திறந்து வைத்தார். பிறகு, அவர் பேசுகையில், ''வைரஸ் தொற்று பரவல் குறையும் வரையில், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பேசும்போது கூட முக கவசத்தை கழட்ட கூடாது. கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும். தமிழக அரசு பரிந்துரை செய்துள்ள வைட்டமின், 'சி'மாத்திரை, ஜிங்க மாத்திரை, கபசுர குடிநீர் மற்றும் முட்டை உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிட வேண்டும். மேலும், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்,'' என்றனர். எஸ்.ஐ., ராஜேந்திரன், ஜவுளி ஏற்றுமதி நிறுவன பணியாளர்கள், போலீசார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X