பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை வளர்ப்போருக்கு கிசான் அட்டையில் கடன்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கரூர்: விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்போருக்கு, கிசான் கடன் அட்டையில், இரண்டு லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இது குறித்து, கரூர் கலெக்டர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட, கால்நடை பராமரிப்புத்துறையின் விவசாயம் சார்ந்த, கால்நடை வளர்க்கும் கிசான் கடன் அட்டை வைத்துள்ள நபர்களுக்கு, வங்கிகள் மூலம் மூலம், இரண்டு லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மாவட்டத்தில், 8,760 விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்போருக்கு, கிசான் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு, கால்நடை மருந்தகத்தில் கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பம் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X