பொது செய்தி

தமிழ்நாடு

கொசுவலை நிறுவன பணியாளர்களுக்கு தொற்று

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கரூர்: கொசுவலை நிறுவன வாகனத்தில் பணிக்கு வந்தவர்களுக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மற்ற பணியாளர்கள் பீதியில் உள்ளனர்.


கரூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று பரவல், இரட்டை இலக்கமாக உயர்ந்து வருகிறது. தோகைமலை, கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், கரூர் கோவை சாலையில் உள்ள ரசாயன பூச்சு கொண்ட ஏற்றுமதி ரக கொசுவலை உற்பத்தி நிறுவனத்திற்கு பணிக்கு வருகின்றனர். வாகனம் மூலம் பணியாளர்களை அழைத்து வருகின்றனர். தற்போது, பஞ்சப்பட்டி அருகே கொமட்டேரி, தோகைமலை அருகில் கீழவெளியூர் ஆகிய இரு கிராமங்களை சேர்ந்த, 15 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 10க்கும் மேற்பட்டவர்கள் கொசுவலை நிறுவனத்தில் வாகனத்தில் பணிக்கு வந்தவர்கள் என்று தெரிகிறது. இதனால், சுகாதாரத்துறை, பஞ்சாயத்து நிர்வாகம் வாயிலாக தண்ணீர் பந்தலில் உள்ள நிறுவனத்தில், இரண்டு பிரிவுகளில் பணியாற்றும் பணியாளர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அங்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின், அவர்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் கூறினர். அங்கு பணிபுரியும், 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பீதியில் உள்ளனர். மேலும், கரூர் நகராட்சி வெங்கமேடு பகுதியில், ஆறு பேருக்கும், குளித்தலை அருகே இரும்பூதிபட்டியில் இருவர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளை சேர்ந்த மூவர் உள்பட, அதிகபட்சமாக ஒரே நாளில், 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து, கரூரை சேர்ந்த, 25 பேர் கொரோனா பாதிப்பில் குணமடைந்து, நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X