பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் கலெக்டர் அன்பழகன், வெளியிட்டுள்ள அறிக்கை: சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு, பயிற்சியை துவங்குவதற்கு விதிமுறைகளுடன் வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 15 முதல், 50 வயதிற்குட்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும். தடகளம், ஹாக்கி, கைப்பந்து, கையுந்துபந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கு, சமூக இடைவெளியுடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும். டேக்வாண்டோ, ஜூடோ, கபடி, கராத்தே, குத்துச்சண்டை, ஊசூ, மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளுக்கு, உடற்பயிற்சிக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். குழு விளையாட்டில், தனிப்பட்ட விளையாட்டு நுணுக்கங்களை கற்றுக்கொள்ள, குறைந்த நபர்களுடன் சமூக இடைவெளியுடன் பயிற்சி அளிக்கப்படும். விளையாட்டு அரங்கில் நுழையும்போது, வெப்பமானி கொண்டு சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவர். முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். வீரர்கள், வீராங்கனைகள் தனித்தனி உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். பயிற்சிக்கு முன்பும், பின்பும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். பயிற்சி மேற்கொள்வதற்கு, நுழைவு படிவத்தை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்திலிருந்து பெற்று, பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். மேலும் விபரம் பெற, கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலரை, 7401703493 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X