சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்


திருநெல்வேலி: திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் முன்பு துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் . திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி 35, நெல்லை மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் பெருமாள்புரத்தில் மக்கும் குப்பை மக்காத குப்பையை பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் பணியாற்றினார். அப்போது அவரது வலது கை இயந்திரத்தில் சிக்கி துண்டிக்கப்பட்டது. அந்த இயந்திரத்துக்கு என தனியாக ஆப்பரேட்டர் நியமிக்கப்பட வேண்டும் ஆனால் துப்புரவு தொழிலாளியை அதில் பயன்படுத்தியதால் அவர் கையை இழக்க நேரிட்டது. எனவே இதற்குப் பொறுப்பேற்று மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கையை இழந்த துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் எனகோரி இன்று திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் முன்பு துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X