சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி மணல் கடத்தல்: மூன்று வாகனங்கள் பறிமுதல்

Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

குளித்தலை: மணல் கடத்த பயன்படுத்திய, மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., பூவாய்ப்பட்டியில், அரசு அனுமதியின்றி மணல் மற்றும் கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாக, போலீசாருக்கு பொது மக்கள் புகார் மனு அளித்தனர். திருச்சி டி.ஐ.ஜி., ஆனிவிஜயா உத்தரவின்படி, குளித்தலை டி.எஸ்.பி., கும்மராஜா தலைமையில், தோகைமலை போலீசார் மணல் கடத்திய இடத்தை, நேற்று முன்தினம் இரவு சுற்றி வளைத்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் டிப்பர் லாரி, பொக்லைன், மினி டிப்பர் வாகன டிரைவர்கள் தப்பி விட்டனர். போலீசார் மூன்று வாகனங்களையும் பறிமுதல் செய்து, போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி உள்ளனர். வாகனத்தின் உரிமையாளர் கண்ணன் மீது, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய டிரைவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
30-ஜூலை-202019:50:28 IST Report Abuse
Mani . V அனுமதி இல்லாம ஏன்யா கடத்துறீங்க? அனுமதி வாங்கி விட்டு கடத்த வேண்டியதுதானே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X