தரமற்ற சிமென்ட் கலவையில் சாலை அமைப்பு; ஜல்லிக்கற்கள் பெயர்வதால் அவதி

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில் தரமற்ற சிமெண்ட் கலவையுடன், ஜல்லிக்கற்கள், சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க பயன்படுத்தியுள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.


கரூர் நகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை இணைப்பு பணிகள் நடக்கின்றன. இதற்காக, வீடுகள், வர்த்தக நிறுவனங்களின் கழிவு நீர் குழாய்களை, பாதாள சாக்கடை குழாய்களுடன் இணைக்கவும், புதிய குடிநீர் குழாய் இணைப்புக்காகவும், சாலைகளில் பள்ளம் தோண்டப்படுகிறது. இணைப்பு பகுதிகள் நிறைவு பெற்ற பிறகு, குழியாக உள்ள சாலைகளில், தரமான சிமென்ட் கலவையுடன், ஜல்லிக்கற்கள் போட வேண்டும். இல்லையென்றால், தார் இணைக்கப்பட்ட, ஜல்லிக்கற்களை சேதம் அடைந்த சாலைகளில் போட வேண்டும். ஆனால், கரூர் நகரப்பகுதிகளில் குறைந்த அளவுடைய சிமென்ட் கொண்ட, ஜல்லிக்கற்களை கொண்டு, குழிகளை நிரப்பி வைத்துள்ளனர். அதன் மீது வாகனங்கள் செல்லும் போது, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறி கிடக்கிறது. இதனால், பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. வாகனங்களில் செல்கிறவர்களும் பாதிப்பு அடைகின்றனர். எனவே, தரமான சிமென்ட் கலவையுடன், ஜல்லிக்கற்களை சேதம் அடைந்த சாலைகள், குழிகளில் போட கரூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X