குப்பை கிடங்காகிய ஆடுவதை கூடம்: துர்நாற்றம் வீசுவதால் அதிருப்தி

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் அருகே உள்ள ஆடுவதை கூடத்தில், குப்பை மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். மழை பெய்து வரும் நிலையில், துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.


கடந்த, 2006-11ல், வாங்கல் சாலையில், 50 லட்ச ரூபாய் செலவில் நவீன ஆடுவதை கூடம் கட்டப்பட்டது. இறைச்சிக்காக, முந்தைய நாள் இரவு கொண்டு செல்லப்பட்டு, கால்நடை மருத்துவர் பரிசோதனைக்கு பிறகு, ஆடுகள் வெட்டப்பட்டு, நகராட்சி சுகாதார பணியாளர்கள், 'சீல்' வைத்த பிறகு, பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட வேண் டும். ஆனால், இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்படுவது இல்லை. ஆடுகளை ஆங்காங்கே வெட்டி, மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதை, நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை. மேலும், பல ஆண்டுகளாக புதிய ஆடுவதை கூடம் பூட்டப்பட்டுள்ளது. இதனால், முட்புதர்கள் முளைத்து ஆடுவதை கூடத்தையே மறைத்துள்ளது. இந்நிலையில், கரூர் நகராட்சியில், 48 வார்டுகளில் சேகரிப்படும் குப்பை, தரம் பிரிக்கப்பட்டு, உரங்களாக மாற்றும் நடவடிக்கை ஒரு பக்கம் நடந்து வருகிறது. அந்த வகையில் பிரிக்கப்பட்ட மட்காத குப்பையை மூட்டைகளில் கட்டி ஆடுவதை கூடத்தில் குவித்துள்ளனர். தற்போது, மழை பெய்து வருவதால், குப்பை மூட்டைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அந்த வழியாக செல்ல முடியவில்லை என, பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, குப்பை மூட்டைகளை அகற்ற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X