பொது செய்தி

தமிழ்நாடு

விலையில்லா சீருடை அனுப்பும் பணி நிறைவு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

நாமக்கல்: அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஆண்டுதோறும், நான்கு ஜோடி சீருடைகள் வழங்கப்படுகிறது. இவற்றில் முதல் ஜோடி சீருடைகள், பள்ளி திறக்கும் நாளில் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் காரணமாக, இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இருப்பினும், பாடபுத்தகங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், முதல்ஜோடி சீருடைகளும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, அரசு பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம், மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து சீருடைகள் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. இந்த சீருடைகள் பள்ளி திறக்கும் நாளில், மாணவர்களுக்கு வழங்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X