நாமக்கல் மாணவிக்கு நிதியுதவி வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் மாணவிக்கு நிதியுதவி வழங்கல்

Added : ஜூலை 30, 2020
Share

நாமக்கல்: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல்லை சேர்ந்த மாணவிக்கு, அ.ம.மு.க., சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வில், நாமக்கல் இ.பி. காலனியை சேர்ந்த லாரி டிரைவர் நடராஜன், ஜோதி தம்பதியரின் மகள் கனிகா, 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்றார். அந்த மாணவிக்கு பெருமை சேர்க்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மாணவி கனிகாவுக்கு, அ.ம.மு.க., சார்பில், நாமக்கல் மாவட்ட மற்றும் நாமக்கல் நகரம் சார்பில், அக்கட்சியின் துணை தலைவரும் வடக்கு மாவட்ட செயலாளருமான அன்பழகன் தலைமையில் மாணவியை பாராட்டி, 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினர். தெற்கு மாவட்ட செயலாளர் சாமிநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X