பொது செய்தி

தமிழ்நாடு

வடிகால் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: சமயசங்கிலி, தொட்டிபாளையம் பகுதியில் வடிகாலில் சாயக்கழிவுநீர் செல்ல ரகசிய குழாய் பதிக்கப்பட்டுள்ளதா என, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிபாளையம் அருகே, சமயசங்கிலி அடுத்த தொட்டிபாளையத்தில் ஏரி உள்ளது. இங்கு எப்போதும் தண்ணீர் இருப்பதால், அதிகளவு மீன்கள் உள்ளன. நேற்று முன்தினம் காலை ஏராளமான மீன்கள் இறந்து, மிதந்தன. சாயக்கழிவுநீர் கலப்பதால் தான் மீன்கள் இறந்து விட்டன என, புகார் எழுந்தது. தொடர்ந்து, குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகுமார் ஏரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்பகுதி மக்கள், ' வடிகாலில் ரகசியமாக குழாய் அமைக்கப்பட்டு, இரவு நேரத்தில் சாயக்கழிவுநீர் வெளியேற்றி வருகின்றனர்' என, தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளை அழைத்து சென்று இடங்களை காண்பித்தனர். பொதுமக்கள் காட்டிய வடிகாலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 'இன்னும் ஓரிரு நாளில் நடவடிக்கை இருக்கும்' என, மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X