பொது செய்தி

தமிழ்நாடு

'பணிக்கு வரும் தொழிலாளர்களை தினமும் கண்காணிக்க வேண்டும்'

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: 'காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் பணிக்கு வரும் தொழிலாளர்களை கண்காணித்து சுகாதார அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்' என, மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.


பள்ளிபாளையத்தில், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம், கமிஷனர் இளவரசன் தலைமையில் நடந்தது. விசைத்தறி, பேக்கரி, ஓட்டல் மற்றும் இறைச்சி கடை, வர்த்தக நிறுவனங்களின் உரிமையார்கள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை, தலைமை அலுவலர் வீரமணி பேசியதாவது: கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம். பணிபுரியும் இடம், வெளியே செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கடைகள், தொழிற் கூடங்களை கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கடைகளில் கூட்டத்தை சேர்க்கக் கூடாது. பணிக்கு வரும் தொழிலாளர்களை தினமும் கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் நகராட்சிக்கும், சுகாதார அதிகாரிகளுக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் சரண்யாதேவி, நகராட்சி பொறியாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X