பொது செய்தி

தமிழ்நாடு

வீடு வீடாக விழிப்புணர்வு: பொதுமக்கள் வலியுறுத்தல்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் குடியிருப்பு பகுதியில் கொரோனா தொற்று பரவலை தடுக்க, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிபாளையத்தில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆண்டிக்காடு பகுதியில் மட்டும், 20க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காந்திபுரம், பெரியார்நகர், கண்டிப்புதுர் என, பரவலாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் உள்ள மக்கள் அலட்சியமாக உள்ளதே இதற்கு காரணம். ஒன்றாக சேர்ந்து தாயம் ஆடுவது, பேசுவது, பணி புரியும் இடத்தில் சமுக இடைவெளியை கடைபிடிக்க மறுப்பது, முக கவசம் இல்லாமல் வெளியில் செல்வது என, அலட்சியமாக உள்ளனர். மேலும் சளி, இருமல், காய்ச்சல் இருந்தாலும் பொருட்படுத்துவதில்லை. இதனால், ஒருவருக்கு வந்தால், அடுத்தடுத்த நபர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, குடியிருப்பு தோறும் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X