முக கவசம், கபசுர குடிநீர் குமாரபாளையத்தில் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசம், கபசுர குடிநீர் குமாரபாளையத்தில் வழங்கல்

Added : ஜூலை 30, 2020
Share

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், மக்கள் நீதி மையம் தொழிற்சங்கத்தினர் முக கவசம், கிருமிநாசினி மற்றும் கபசுர குடிநீர் வழங்கினர். மாவட்ட செயலர் காமராஜ் கூறியதாவது: கொரோனாவை ஒழிக்க, பொதுமக்கள் அரசு விதிமுறையை கடைப்பிடிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி மற்றவர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். முக கவசம் இல்லாமல் வெளியில் வரக்கூடாது. தொழில் நிறுவனங்களில் கூட முக கவசம் அணிந்துதான் பணியாற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

* குமாரபாளையத்தில், சேவற்கொடி பேரவையினர் சார்பில் பஸ் ஸ்டாண்ட், அங்காளம்மன் கோவில் மைதானம், தம்மண்ணன் வீதி, சின்னப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். இதே போல், அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி, ஆறாவது வார்டு, தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X