பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

நாமக்கல்: மாவட்டத்தில், மேலும், 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை, 576 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே வெளிமாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த, மூன்று பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை, 579 ஆக அதிகரித்தது. இந்நிலையில், நேற்று, 11 பெண்கள் உள்பட மேலும், 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், நாமக்கல் பகுதியை சேர்ந்த, ஏழு பேர், மோகனூர் கலைவாணி நகரை சேர்ந்த, இருவர், ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்த இருவர், குமாரபாளையத்தை சேர்ந்த, இரண்டு பேர், பள்ளிபாளையத்தை சேர்ந்த, இரண்டு பேர், திருச்செங்கோட்டை சேர்ந்த, இரண்டு பேர், கட்டிபாளையம், சூரியம்பாளையம், குருசாமிபாளையம், மேதரமாதேவி, பெருமாம்பாளையம், பட்லூர் கவுண்டம்பாளையம், காந்திபுரம், பவித்திரம் பகுதியை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம், 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், இரண்டு பேர், வெளிமாநிலம் சென்று திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 604ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X