பொது செய்தி

தமிழ்நாடு

கொசு தொல்லை அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கை அவசியம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில், சில நாட்களாக மழை பெய்து வருவதால், கொசு தொல்லை அதிகரித்துள்ளது. பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக, தொடர்ச்சியாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகள், வடிகால், மற்றும் சாலைகளில் திறந்தவெளியில் மழை நீர் தேங்கியுள்ளது. கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாலையில் கொசுக்கள் வந்து விடுகின்றன. காவேரி, வசந்தநகர், பெரியார்நகர், தாஜ்நகர் மற்றும் பல பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் தூங்க முடியாத நிலை ஏற்படுவதால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். கொசுவால், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வருவதற்கும் வாய்ப்புள்ளதால், சுகாதார துறை அதிகாரிகளும், உள்ளாட்சி துறை அதிகாரிகளும் சுகாதார பணிகளை மேற்கொண்டு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X