பொது செய்தி

தமிழ்நாடு

காந்திபுரத்தில் சுகாதார பணிகள் தீவிரம்

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதியில், சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. பள்ளிபாளையம் நகராட்சி காந்திபுரம் முன்றாம் வீதி, ஆண்டிக்காடு, பெரும்பாறை ஆகிய இடங்களில் சிலருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில், கை தெளிப்பான், மற்றும் இயந்திரத்தின் மூலம் கிருமி நாசினி தெளிப்பு, பிளீச்சிங் பவுடர் போடுதல் போன்ற சுகாதார பணிகள் நடந்தன. மேலும், அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. வெளி ஆட்கள் யாரும் செல்ல முடியாதபடி, சம்பந்தப்பட்ட பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. காந்திபுரம் மூன்றாம் வீதியில் உள்ள மின் அலுவலகமும் மூடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X