ஹனாய்: கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்த விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளில் ஒன்று வியட்நாம். நியூசிலாந்தில் பாதிப்பு முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் கடைசியாக இருந்த ஒரு நோயாளியும் குணமடைந்து விட்டார். இந்நிலையில் பாதிப்பு முற்றிலும் இல்லை என மார்தட்டிக் கொண்ட வியட்நாமில் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கை அனைவரும் கட்டாயமாக கடைபிடித்தால்தான் உலக நாடுகள் மத்தியில் கொரோனா அற்ற நாடு என்ற பெயரை வாங்க முடியும் என வியட்நாம் அரசு அதன் குடிமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் வியட்நாமில் கொரோனா தாக்கம் துவங்கியது. அப்போது முதலே அதன் பிரதமர் கயெங் சுவாங் புக் கடந்த 2014ஆம் ஆண்டு வியட்நாமில் ஏற்பட்ட நோய்த் தாக்கத்தின் ப்ளூபிரிண்ட்டைப் பார்த்து கொரோனா தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என அறிந்து கொண்டார்.

கடந்த வாரத்தில் வெறும் 450 நோயாளிகளே வியட்நாம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். மற்ற கிழக்காசிய நாடுகளை ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பில் வியட்நாம் அதிக கவனமாக உள்ளது. அண்டை நாடுகளிடம் நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாகவோ அல்லது தரை வழியாகவோ வியட்நாமுக்குள் நுழையாத வண்ணம் எல்லைப் பாதுகாப்பு படை விழிப்புடன் இருக்க பிரதமர் அறிவுறுத்தினார்.

வியட்நாம் தலைநகர் ஹனோய்-இல் கட்டாய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 2ம் கட்ட தாக்கத்திலிருந்து தப்பிக்க அமெரிக்காவின் சிடிசி அமைப்பு உதவுவதாக அதன் பிரதமர் தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அறையில் தற்போது வியட்நாம் உள்ளது. இதிலிருந்து விரைவில் வியட்நாம் மீண்டு வரும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE