பிரிட்டனுக்கு கடத்தப்பட்ட சிவன் சிலை இந்தியா திரும்புகிறது

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
லண்டன்: கடந்த 1998 ல், ராஜஸ்தானில் இருந்து பிரிட்டனுக்கு கடத்தி செல்லப்பட்ட 9ம் நூற்றாண்டை சேர்ந்த பழமைவாய்ந்த சிவன் சிலையை மீண்டும், இந்தியா கொண்டு வரப்பட உள்ளது.ராஜஸ்தானின் பரோலியில் கதேஸ்வர் கோயில் உள்ளது. இங்கு, கடந்த 1998 ம் ஆண்டு , 9 ம் நூற்றாண்டை சேர்ந்த 4 அடி சிலை திருடப்பட்டது. பின்னர் இந்த சிலை, பிரிட்டனில் உள்ள பழங்கால பொருட்களை சேகரிக்கும், தனியார் நிறுவனத்தில்
Stolen statue, Lord Shiva, repatriate, UK, India, smuggled, statue, கடவுள், சிவன், சிலை, பிரிட்டன், இந்தியா, ராஜஸ்தான்,

லண்டன்: கடந்த 1998 ல், ராஜஸ்தானில் இருந்து பிரிட்டனுக்கு கடத்தி செல்லப்பட்ட 9ம் நூற்றாண்டை சேர்ந்த பழமைவாய்ந்த சிவன் சிலையை மீண்டும், இந்தியா கொண்டு வரப்பட உள்ளது.

ராஜஸ்தானின் பரோலியில் கதேஸ்வர் கோயில் உள்ளது. இங்கு, கடந்த 1998 ம் ஆண்டு , 9 ம் நூற்றாண்டை சேர்ந்த 4 அடி சிலை திருடப்பட்டது. பின்னர் இந்த சிலை, பிரிட்டனில் உள்ள பழங்கால பொருட்களை சேகரிக்கும், தனியார் நிறுவனத்தில் இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்தியா மற்றும் பிரிட்டன் அதிகாரிகளின் முயற்சியால், இந்த சிலை லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அது முதல், லண்டனில் மத்தியில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் தற்போது வரை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2017 ல் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், அந்த சிலையை ஆய்வு செய்து, ராஜஸ்தானின் கதேஸ்வர் கோவிலில் இருந்து கடத்தப்பட்ட சிலை தான் என்பதை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து, விரைவில் அந்த சிலை, இந்தியா கொண்டு வரப்பட்டு காதேஸ்வரர் கோவிலில் வைக்கப்பட உள்ளது.

இந்தியாவிலிருந்து கடத்தி செல்லப்பட்ட விலைமதிப்பில்லாத கலைப்பொருட்கள் மற்றும் தொல்லியல் பொருட்களை, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் இணைந்து கண்டுபிடித்த பொருட்களில், இது தான் சமீபத்தியது ஆகும்.


latest tamil newsஉலக பாரம்பரிய சின்னமான, குஜராத்தின் ராணி கே வாவ் என்ற இடத்தில் திருடப்பட்ட பிரம்மா - பிரமணி சிலை, மீட்கப்பட்டு 2017 ல் தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, இந்தியாவில் திருடப்பட்ட 12ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையை லண்டன் போலீஸ் கமிஷனர் மீட்டார். பின்னர், 2019ம் ஆண்டு, மத்திய கலாசார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின் 2019 ஆக., 15ல் 17 ம் நூற்றாண்டை சேர்ந்த நவனீத கிருஷ்ணர் சிலையும், 2ம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால சிலை ஒன்றும் அமெரிக்க தூதரக அதிகாரி, இந்தியாவிடம் ஒப்படைத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-ஜூலை-202020:05:01 IST Report Abuse
Natarajan Ramanathan நான் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள WORCHESTER COLLEGE MUSEUMல் ஏராளமான சோழர்கால சிற்பங்களை பார்த்தேன். ஆனால் மிக அழகாக DISPLAY செய்து மிக பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
30-ஜூலை-202019:10:35 IST Report Abuse
S. Narayanan சிலை கடத்தும் கயவர் கூட்டம் எப்போது ஒழியும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-ஜூலை-202016:05:34 IST Report Abuse
Lion Drsekar இதற்க்கு மூல காரணமாக இருந்தவர்கள் பல லட்சம் சம்பளம் மற்றும் பென்சன் பெற்றுக்கொண்டு மிகவும் வசதியாக இருக்கிறார்கள் , இதைவிட வேறு என்ன வேண்டும் இந்த திருநாட்டில் . உச்ச நீதிமன்றம் இவர்கள் கைகளில் இருந்து கைப்பற்றி மற்ற மாதங்களில் இருப்பதுபோல் அவர்களிடமே ஒப்படைக்க மறுப்பது எதற்க்காக என்பது புரியாத புதிராக உள்ளது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X