குல்பூஷன் ஜாதவ் வழக்கை விசாரிக்க சிறப்பு பெஞ்ச்: பாக்.

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
குல்பூஷண் ஜாதவ், குல்பூஷன், இஸ்லாமாபாத், உயர்நீதிமன்றம், Islamabad, pakistan, high court, special bench, Kulbhushan Jadhav's case

இஸ்லாமாபாத்: குல்பூஷண் ஜாதவ் வழக்கை விசாரிக்க இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் சிறப்பு பெஞ்ச் அமைத்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பலுாசிஸ்தானில் உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில், 2016ல், பாக்., ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.கடந்த, 2017ல் பாக்., ராணுவ நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிலையில், அவர் இந்திய துாதரகத்தை அணுகவும், தண்டனையை மறு ஆய்வு செய்யவும், சர்வதேச நீதிமன்றம், கடந்த ஆண்டு உத்தரவிட்டது. தண்டனையை எதிர்த்து, குல்பூஷன் ஜாதவ் மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி அளித்து, பாகிஸ்தான் அரசு, மே மாதம் அவசர சட்டத்தை பிறப்பித்தது.


latest tamil news



இந்நிலையில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் சிறப்பு பெஞ்ச்சை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி அக்தர் மின்னலாஹ் தலைமையிலான பெஞ்ச் இனி குல்பூஷன் ஜாதவ் வழக்கை விசாரிக்க உள்ளதாகவும், ஜாதவ் சார்பில் வழக்கறிஞர் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
30-ஜூலை-202017:27:43 IST Report Abuse
Sankar Ramu மிலிட்ரி கோர்ட்லேருந்து சிவில் கோர்ட். இந்தியாவின் பலனுக்கு இன்னொரு வெற்றி. வாழ்க மத்திய அரசே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X