அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய கல்விக் கொள்கையில் கல்விக்கு ஜிடிபி.,யில் 6% ஒதுக்குதல்: கமல் வரவேற்பு

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதிய_கல்விக்கொள்கை, கமல்ஹாசன், ஜிடிபி, கல்வி, 6சதவீதம், மக்கள் நீதி மையம், மக்கள் நீதி மய்யம், Kamal Haasan, welcome, GDP allocation, education, People's Justice party

இந்த செய்தியை கேட்க

சென்னை: புதிய கல்விக் கொள்கையில் கல்விக்கு ஜி.டி.பி.,யில் 6 சதவீதம் செலவிடப்படும் என மத்திய அரசு அறிவித்ததை மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை நேற்று (ஜூலை 29) வெளியிட்டது. அதில் பல்வேறு புதிய மாற்றங்களுடன் பள்ளிக் கல்வியில் இருந்து உயர் கல்வி வரை, தற்போதுள்ள சூழ்நிலை மற்றும் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு, பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஜி.டி.பி., எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதம், கல்விக்கு செலவிடப்படும் என்ற அறிவிப்பு, கல்விக்கு மத்திய அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. கடந்த, 1960களில் இருந்து இந்தக் கோரிக்கை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


இது குறித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: புதிய கல்விக் கொள்கையில், நாட்டின் ஜி.டி.பி.,யில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதே போல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையையும் தயார்படுத்த வேண்டும். மருத்துவத்துறை வழக்கமான 1 சதவீதத்தில் இருந்து உயர்ந்து 7 முதல் 8 சதவீத பங்கினை பெறுவது தேசத்தின் நலனுக்கு இன்றியமையாதது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
01-ஆக-202008:28:13 IST Report Abuse
Srinivasan Rangarajan இயல்பான தமிழில் தெளிவான முறையில் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டியிருக்கிறார் ..... வரும் நாட்களில் மாற்றி பேசாமல் இருக்கிறாரா பார்ப்போம்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
31-ஜூலை-202007:34:48 IST Report Abuse
Bhaskaran உனக்கும் கல்விக்கும் என்னையா சம்பந்தம் .
Rate this:
Cancel
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
30-ஜூலை-202022:54:23 IST Report Abuse
Enrum anbudan மத்திய அரசு ஒரு திட்டம் கொண்டு வந்து அதை நமது தமிழ்நாட்டில் திமுக, அதிமுக , மற்றும் அல்லக்கைகள் எதிர்த்தால் அந்த திட்டம் மக்களின் நலன் சார்ந்ததாகவே இருக்கும் என்பது திண்ணம். தமிழன் விழித்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்த திருட்டு கூட்டத்தை பிடிக்கவே முடியாது. நாட்டை கூறு போட்டு நாசமாக்கி விடுவார்கள். வெளி நாட்டு கைக்கூலிகள் இப்பொழுது வரும் திட்டங்களை எதிர்ப்பதில் நடிகர் கூட்டங்களை காசு கொடுத்து எதிர்க்க வைத்து வெகு ஜன மக்களிடம் எதிர்ப்பு மனா நிலையை உருவாக்குகின்றார்கள் அதை மத்திய அரசு தடுக்க வேண்டிய வழிகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X