பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 30) ஒரே நாளில் 5,864 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய எண்ணிக்கையை (6,426) விட குறைவான பாதிப்பாகும்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,864 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,811 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 53 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,39,978 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 119 ஆய்வகங்கள் (அரசு-58 மற்றும் தனியார் 61) மூலமாக, இன்று மட்டும் 61,202 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 25 லட்சத்து 97 ஆயிரத்து 862 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.


latest tamil news


இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,560 பேர் ஆண்கள், 2,304 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,45,615 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 94,336 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,295 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 178 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 97 பேர் உயிரிழந்தனர். அதில், 32 பேர் தனியார் மருத்துவமனையிலும், 65 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,838 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 57,962 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 11,970 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,98,093 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 29 ஆயிரத்து 915 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
04-ஆக-202021:03:21 IST Report Abuse
ocean குரோனா ஒவ்வொரு மனித தொற்றிலும் வலு குறைந்து கொண்டே வருகிறது. வலுவற்ற குரோனா அலை அலையாய் காற்றில் நெடியுடன் பரவுவதால் ஒரு இடத்தில் அதிகமாகவும் பிறிதொரு இடத்தில் குறைவாகவும் மக்களை பாதிக்கிறது. வீட்டுக்குள் அடங்கி இருக்கும் எவரும் முக கவசத்தை மாட் டுவதில்லை. நேராக மூக்கினுள் போகும் குரோனா வைரஸ் துகள்கள் ஒருவித நெடியை கிளப்பி தும்மலை தருவதுடன் லேசான தலைவலியை உண்டாக்கும்.
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
31-ஜூலை-202016:49:11 IST Report Abuse
R.Kumaresan வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு போட்டு இந்தியா, தமிழ்நாட்டில் 97 பேர் பலியாயியுள்ளனர் அதிகம்தான்..n. சுத்தமாக இருக்கனும்.. தமிழ்நாட்டில் கூட்டமாகக்கூடி கூடாமல் ஒலிபெருக்கியை சத்தமாக வைத்துக்கொண்டு சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பதால் வைரஸ் நோய் பரவுவது நிற்பதாகத் தெரியவில்லை..
Rate this:
Cancel
jeevadinamalar - Tirunelveli,இந்தியா
31-ஜூலை-202012:22:47 IST Report Abuse
jeevadinamalar இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு குறைந்த பிறகு அதிகரிக்கும். இதுதான் ட்ரெண்ட். இந்த ட்ரெண்ட் கொஞ்ச காலத்துக்கு நீடித்து பிறகுதான் குறையும். அதாவது நீங்கள் எல்லாம் கட்டுப்பாட்டுடன் வாச பழகிக்கொண்டால்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X