சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

இந்தியா தான் உலகின் தடுப்பு மருந்து மையம்!

Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 இந்தியா தான் உலகின் தடுப்பு மருந்து மையம்!

வரும், 2021 இறுதிக்குள், உலகெங்கும், 200 கோடி பேருக்காவது கொரோனா தடுப்பு மருந்துகளை வினியோகம் செய்துவிட, உலக சுகாதார அமைப்பின், 'கோவேக்ஸ்' திட்டம் இலக்கு நிர்ணயித்துள்ளது.இதில் இந்தியா பெரும் பங்களிப்பை செய்யப் போகிறது என, உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்காசிய இயக்குனர், டாக்டர், பூனம் கேத்ரபால் சிங் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, உலகின் முக்கியமான தடுப்பு மருந்துகள் மற்றும் ஊசிகளை தயாரித்து ஏற்றுமதி செய்யும் மையமாக இந்தியா திகழ்ந்து வருகிறது. எனவே, “கொரோனா விஷயத்திலும், இந்தியா தான் உலகின் தடுப்பு மருந்து மையமாக” இருக்கும் என, டாக்டர் பூனம் தெரிவித்தார்.

நேற்றுவரை, உலகெங்கும், 25 கொரோனா தடுப்பு மருந்துகள் மனிதர்களுக்கு தரப்பட்டு, சோதனைகள் நடந்து வருகின்றன. இவற்றில், ஐந்து முக்கியமான தடுப்பு மருந்து சோதனைகள், மூன்றாம் கட்ட பரிசோதனைகளில் உள்ளன.சோதனைகளை விரைவுபடுத்துவதற்காக, 'பைசர்-பயோன்டெக்' போன்ற நிறுவனங்கள், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளை ஒரே நேரத்தில் செய்து வருகின்றன.இந்தியாவில் தற்போது இரண்டு தடுப்பூசிகள், முதலாம் கட்ட பரிசோதனையில் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harindra Prasad R - chennai,இந்தியா
04-ஆக-202012:04:07 IST Report Abuse
Harindra Prasad R வாங்கும் நிலை மாறி விற்கும் நிலையை மாண்புமிகு மோடிஜி உருவாக்கியுள்ளார். இதுவே இந்தியாவின் வளர்ச்சி . நாம் ஒன்றிணைந்து சிந்திப்போம் நாட்டை நேசிப்போம் .
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஆக-202023:54:13 IST Report Abuse
தல புராணம் பரிசோதனை எலிகள் இங்கே தான் கிடைக்கும்.. ஏழை மனித உயிருக்கு பாதுகாப்பு முற்றிலும் இல்லாத ஒரு நாடுன்னா இந்தியா தான்.. மருந்தின் தவறுகளால் செத்தால் வெகு சுலபமாக குறைவான செலவில், லஞ்சத்தில் மொத்த கதையை முடித்து விடலாம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X