கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ராணுவ ஒப்பந்த ஊழல் வழக்கு: ஜெயா ஜெட்லிக்கு 4 ஆண்டு சிறை

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: ராணுவ ஒப்பந்தத்தில் நிகழ்ந்த ஊழல் தொடர்பாக, சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி உள்ளிட்ட 4 பேருக்கு டில்லி ஐகோர்ட் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.கடந்த 2001ம் ஆண்டு போடப்பட்ட ராணுவ ஒப்பந்தத்தில் ராணுவத்திற்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்கியதில் நடந்த ஊழலை டெகல்கா இணைய தளம் அம்பலப்படுத்தியது.இதனடிப்படையில் சமதா கட்சித்
  Delhi High Court ,On Hold 4-Year Jail Term For olitician Jaya Jaitley

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ராணுவ ஒப்பந்தத்தில் நிகழ்ந்த ஊழல் தொடர்பாக, சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி உள்ளிட்ட 4 பேருக்கு டில்லி ஐகோர்ட் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கடந்த 2001ம் ஆண்டு போடப்பட்ட ராணுவ ஒப்பந்தத்தில் ராணுவத்திற்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்கியதில் நடந்த ஊழலை டெகல்கா இணைய தளம் அம்பலப்படுத்தியது.


latest tamil newsஇதனடிப்படையில் சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லி மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த கோபால் பச்சர்வால் மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.பி.முர்கை ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. ஜெயா ஜெட்லி உள்ளிட்ட மற்றவர்கள் மீது டில்லி கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் 2012-ம் ஆண்டு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.

இன்று வெளியான தீர்ப்பில் ஜெயா ஜெட்லி உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து. தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய உள்ளதாக ஜெயா ஜெட்லி கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
01-ஆக-202022:05:29 IST Report Abuse
Tamilnesan இந்திய தண்டனைகள் சட்டங்களின் லட்சணம் இது தான். இந்த குற்றத்தை ஒரு சாமானியன் செய்திருந்தால் நாற்பது வருடங்கள் சிறை தண்டனை விதித்திருப்பார்கள். சாமானியனுக்கு ஒரு சட்டம், அரசியல்வியாதிக்கு ஒரு சட்டம். வாழ்க இந்திய ஜனநாயகம்.
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
31-ஜூலை-202006:59:00 IST Report Abuse
Cheran Perumal நல்ல வேளை, குற்றம் சாட்டப்பட்டவர் உயிரோடு உள்ளார்.
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
31-ஜூலை-202006:50:53 IST Report Abuse
natarajan s 1986 இல் போலீசால் கொல்லப்பட்ட BHARATHPUR ராஜா மான்சிங் (M L A ) கொலை வழக்கில் இருவாரங்களுக்கு ,முன் தீர்ப்பு வந்தது. அது மாதிரிதான் இதுவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X