பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 61% பேர் 'டிஸ்சார்ஜ்': குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று, 257 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் பாதிப்பிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை, 3,000த்தை நெருங்கியுள்ளது.



latest tamil news




கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் 200க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. அதேவேளையில், தொற்றிலிருந்து மீள்வோரின் சதவீதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் இன்று 303 பேருக்கு தொற்று உறுதியானதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,643 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்; மொத்த உயிரிழப்பு, 67 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



கோவையில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 296 பேர் குணமடைந்த நிலையில் நேற்று, 184 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று, 257 பேர் குணமடைந்தனர். இதுவரை, 2,851 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கோவையில் தினமும் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளானாலும், பாதிப்பிலிருந்து மீள்வோரின் எண்ணிக்கையும் அதற்கு நிகராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X