அரசியல் செய்தி

தமிழ்நாடு

தலைமைக்கு தலையாட்ட மாட்டேன்: புதிய கல்வி கொள்கைக்கு குஷ்பு வரவேற்பு

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
kushboo, NEP2020, congress, National Education Policy 2020, குஷ்பு, காங்கிரஸ், புதிய கல்வி கொள்கை

சென்னை: புதிய கல்வி கொள்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள காங்., தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, 'தலைமைக்கு தலையை ஆட்டும் பொம்மை நான் இல்லை' என தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், புதிய கல்வி கொள்கைக்கு காங்., கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்பு தெரிவித்துள்ளார்.


latest tamil news



இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: புதிய கல்வி கொள்கையில், கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து எனது நிலைப்பாடு வேறுபடுகிறது. இதற்காக ராகுலிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். நான் உண்மையை தான் பேசுகிறேன். நான் கட்சி தலைமைக்கு தலையை ஆட்டும் ரோபோ அல்ல. கட்சித் தொண்டர் என்பதை விட நாட்டின் குடிமகனாக எனது கருத்தை பதிவிட்டுள்ளேன்.

புதிய கல்வி கொள்கையில் சில இடங்களில் குறை இருப்பினும், இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன். எதிர்கட்சி என்பது நாட்டின் எதிர்காலத்திற்காக உழைப்பது. ஒன்றிணைந்து செயல்படுவதே அரசியல். இதனை பா.ஜ., புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக நான் பா.ஜ.,வில் இணைவேன் என்பதில் உண்மையில்லை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். குஷ்புவின் இப்பதிவு காங்., கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
truth tofday - india,இந்தியா
02-ஆக-202008:33:26 IST Report Abuse
truth tofday நேத்து வந்தவளுக்கு அழகாக இருக்கிறாள் என்று எத்தனையோ தொண்டர்கள் கடுமையாக உழைத்தும் பதவி கிடைக்காமல் இடுக்கும்போது உயர் பதவி கொடுத்து மகிழ்விப்பதால் வந்த வினை எல்லா கட்சிக்கும் இது பொருந்தும்
Rate this:
Cancel
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
02-ஆக-202001:48:37 IST Report Abuse
தமிழ் வேந்தன் ஸ்லீப்பர் செல்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
01-ஆக-202009:49:54 IST Report Abuse
vbs manian நிஜ குஷ்பு கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வருகிறார். எங்கிருந்தாலும் உங்கள் சுய சிந்தனையை விடாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X