40 ஆண்டுகளுக்கு பின்னர் கணித மேதை சகுந்தலா தேவிக்கு கின்னஸ் சாதனை விருது

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

லண்டன்:"மனித கம்ப்யூட்டர்' என, புகழப்பட்ட, கணித மேதை சகுந்தலா தேவிக்கு 40 ஆண்டுகளுக்கு பின்னர் கின்னஸ் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது .விருதை அரவது மகள் பெற்றுக்கொண்டார்.latest tamil news"மனித கம்ப்யூட்டர்' என, கணித வல்லுனர்களால் புகழப்பட்டவர், கணித மேதை சகுந்தலா தேவி, 80. மிக சிக்கலான கணிதங்களுக்கு, மின்னல் வேகத்தில் விடை அளிப்பதில் வல்லவர்.கணித திறமைக்காக, "கின்னஸ்' சாதனை புத்தகத்திலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

"பன் வித் நம்பர்ஸ், அஸ்ட்ரலாஜி பார் யூ' உள்ளிட்ட, பிரபலமான பல கணித நூல்களை இவர் எழுதியுள்ளார். இளம் வயதிலேயே, தன் கணித திறமையை நிரூபித்து காட்டி, சாதித்த பெருமைக்குரியவர்.

கடந்த, 1980ல், லண்டன் இம்பீரியல் கல்லூரியின், கம்ப்யூட்டர் துறையைச் சேர்ந்தவர்கள், சிக்கலான, 13 இலக்க எண்களை கொடுத்து, அவற்றை பெருக்கி விடையளிக்கும்படி, அவரிடம் சவால் விடுத்தனர்.இந்த சிக்கலான கணக்கிற்கு, 28 வினாடிகளில் விடையளித்து, ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பெங்களூருவில் வசித்து வந்த சகுந்தலா தேவி, சுவாச கோளாறால் காலமானார்.

இதனிடையே 40 ஆண்டுகளுக்கு பின்னர் அதி வேக மனித கணக்கீடு என்று கின்னஸ் உலக சாதனையாளர் விருது சகுந்தலா தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது. லண்டனில்நடைபெற்ற வருது வழங்கும் விழாவில் சகுந்தலாதேவியின் மகள் அனுபமா பானர்ஜி விருதை பெற்றுக்கொண்டார். அவருக்கு திரைப்பட நடிகை வித்யாபாலன் பாராட்டு கடிதம் எழுதியதுடன் சிறப்பு பரிசையும் அனுப்பி உள்ளார்.


latest tamil newsபரிசு பெற்றது குறித்து பேட்டியளித்த அனுபமா பானர்ஜி எனது தாய் உலக சாதனை படைக்கும் போது எனக்கு 10 வயது. நான் எங்கு சென்றாலும் அனைத்து மக்களும் இதனை பற்றி பேசுவார்கள் அந்த பதிவு உலக அளவில் ஒரு பெரிய சாதனை என்று எனக்கு தெரியும் லண்டனின் கோவென்ட்ரியில் உள்ள ட்ரோகாடெரோ மையத்திற்கு சென்றது எனக்கு நினைவிருக்கிறது என கூறினார்.

கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்சின் எடிட்டர் கிரேக் க்ளென்டே கூறுகையில் சகுந்தலா தேவியின் வியக்கத்தக்க சாதனை பல வருடங்களுக்குப்பிறகும் தங்கள் காப்பத்த்தில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது. சகுந்தலா தேவியின் விதிவிலக்கானசாதனை யாராலும் உடைக்க முடியாமல் உள்ளது. தனித்துவமான நபர்களை கவுரவிப்பதன் மூலம் கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் பெருமை கொாள்கிறது என கூறினார்.

இதனிடையே கணித மேதை சகுந்தலா தேவியை குறித்த படம் அமேசான் பிரமை் டைமில் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. இதில் வித்யாபாலன் நடித்துள்ளார். அனு மேனன் இயக்கி உள்ளார். விருது வழங்கப்பட்டது குறித்து வித்யாபாலன் கூறுகையில் சகுந்தலா தேவி படத்தில் நடிப்பதற்காக லண்டன் சென்றிருந்தபோது சகுந்தலாவிற்கு அதிகாரப்பூர்வமாக கின்னஸ் சான்றிதழ் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா உடன் இணைந்து அமேசான் உடன் கின்னஸ் சாதனை குழுவை தொடர்புகொண்டோம். அதன் பின்ன் விருது வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
01-ஆக-202014:11:33 IST Report Abuse
Tamilnesan இவர் பிராமண வகுப்பை சேர்ந்தவர்........ஆகையால், இங்குள்ள த்ராவிஷங்கள் இவருக்கு வாழ்த்து தெரிவிக்க மாட்டார்கள்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
02-ஆக-202011:17:34 IST Report Abuse
meenakshisundaramமிக சரியான கணிப்பு -ஸ்டாலின் இப்போது 'குருடு 'மாத்திரம் இல்லை 'டமார் செவிடும்' கூட ஆமா 'கனிமொழி என்னாச்சு?பெண்ணினத்துக்கே வக்காலத்து வாங்கும் 'தாதா' வாச்சே?...
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
31-ஜூலை-202007:33:19 IST Report Abuse
Bhaskaran இவரது உறவினர்கள் சென்னை அடையாரிலுள்ளார்கள்
Rate this:
Cancel
IYER AMBI - mumbai,இந்தியா
30-ஜூலை-202023:51:01 IST Report Abuse
IYER AMBI இவருக்கு விருது கொடுத்து கின்னஸ் பெருமை தேடிக்கொண்டது. நாங்க ஸ்கூலில் படிக்கும்போது இவரைப்பற்றி பேசி பெருமைப்பட்டுக்கொண்டோம். கின்னஸ் நத்தையை விட மோசம், 45 வருஷம் ஆயாச்சு நாங்க சந்தோஷப்பட்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X