பிரிட்டனில் சைக்கிள் உடற்பயிற்சி இயக்கம்: பிரதமர் போரிஸ் ஜான்சன் துவக்கி வைப்பு

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

லண்டன்: பிரிட்டனில் சைக்கிள் உடற்பயிற்சி இயக்கத்தை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது அவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹீரோ சைக்கிளை ஓட்டினார்.latest tamil news


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை விரட்ட பல்வேறு நாடுகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக பிரிட்டனில் மக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக சைக்கள் உடற்பயிற்சி இயக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த இயக்கத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிமுகம் செய்து நம் நாட்டில் தயாரான ஹீரோ சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

நாட்டிங்ஹாம் என்ற இடத்தில், இந்தியாவில் கொரோனா தடுப்பிற்காக ஆசிய வளர்ச்சி வங்கி ரூ 22 கோடி நிதி அறிவிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் போரிஸ் இந்திய தயாரிப்பான வைக்கிங் புரோ ஹீரோ சைக்களில் பயணம் செய்தார். இது குறித்து பேசிய போரிஸ் ஜான்சன்,' சைக்கிள் மற்றும் நடைப்பயிற்சி நம் ஆரோக்கிய பிரச்னைகளை மேற்கொள்வதில் முக்கிய பங்குவகிக்கிறது. பிரிட்டனில் 200 கோடி பவுண்ட் திட்டத்தில் அமைக்கப்பட உள்ள சைக்கிள் பாதைகள் பலருக்கு இதில் உற்சாகத்தை கொடுக்கும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்


latest tamil newsபோரிஸ் ஜான்சன் தங்கள் நிறுவன சைக்கிளை ஒட்டியது குறித்து, ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான பங்கஜ் எம். முஞ்சல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
IYER AMBI - mumbai,இந்தியா
30-ஜூலை-202023:55:54 IST Report Abuse
IYER AMBI ஹெர்குலிஸ் சைக்கிளை அங்கிருந்து இறக்குமதி செய்தோம் ஒருகாலத்தில். இன்று நம்மவூரு சைக்கிளை அங்கு ஏற்றுமதி செய்கிறோம். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
30-ஜூலை-202021:29:10 IST Report Abuse
Vijay D Ratnam இந்தியாவில் அதிலும் நம்ம தமிழ்நாட்டுல சைக்கிள் ஓட்டுவது கெளரவ குறைச்சலா போய்விட்டது. ஜெயலலிதா துவக்கிய இலவச சைக்கிள் திட்டத்தால் எதோ கொஞ்சம் சைக்கிள் ஓடுது. முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் சைக்கிள் ஓட்டுவது மிகவும் குறைந்துவிட்டது. இன்று தமிழ்நாட்டில் 90 சதவிகித பேருக்கு நீச்சல் தெரியாது. அது மாதிரி எதிர்காலத்தில் சைக்கிள் ஓட்டுவதும் வந்துவிடுமோ.பிரதமர் மோடி யோகாசனம் செய்ய சொன்னா அதுக்கு ஒரு கும்பல் மதச்சாயம் பூசுவது என்றிருக்கும் நிலையில் பிரதமரோ, டாக்டரோ, விஞ்ஞானிகளோ, ஆசிரியர்களோ, பெற்றோர்களோ சைக்கிள் ஓட்டுங்கள்னு சொன்னா ஒருத்தனும் கேட்கமாட்டான். அதே சினிமா ஹீரோ சொன்னா அவிங்க ரசிக அறிவுஜீகள் கேட்க தொடங்குவாய்ங்க. சினிமாவில் கமல், ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி போன்றவர்கள் சைக்கிள் ஓட்டுவது போன்ற காட்சிகளை அமைத்து, ஹேய், என்னடா முட்டி செத்த கெழ போல்டு மாதிரி பைக்ல வர்ற, இளமையின் சின்னம் சைக்கிள் என்பது போல வசனங்கள் பேசி நடித்தால் மாற்றம் வரும்.
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜூலை-202020:20:42 IST Report Abuse
Janarthanan மேக் இன் இந்தியா சைக்கிள் ஓட்டினார் என்று பெரிய எழுத்தில் போடுங்க இங்குள்ள தேசதுரோகிகள் கண்ணில் தெரியட்டும் , அதே போல் இந்திய பிரதமரும் உடல் நலத்திற்க்காக யோகா பயற்சி மேற்கொள்ளுங்க என்று கூறினால் உடனே அதற்க்கு மத சாயம் பூசி கிளம்பி வருவனுங்க கேடு கெட்டவனுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X