அமெரிக்க தேர்தலை தாமதப்படுத்தலாம்: டிரம்ப் டுவிட்டரில் கருத்து

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Donald Trump calls, for 'delay' , 2020 presidential election  claims of voting fraud

வாஷிங்டன்: அமெரிக்க தேர்தலில் இ- மெயில் ஒட்டளிப்பு முறையில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதால் தேர்தலை தள்ளி வைக்கலாம் என அதிபர் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு ( நவம்பர்) இறுதியில் நடக்கிறது. அமெரிக்காவை ஆட்டிபடைத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு, பொருளாதார பிரச்னை போன்றவற்றால் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் ஓரிரு மாகாணங்களில் பிரைமரி தேர்தலில் இ- மெயில் மூலம் ஓட்டளிக்க அனுமதிப்பட்டது. இதில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடும் ஜோபிடன் அபார வெற்றி பெற்றார்.


latest tamil news


இது போன்று ஓட்டுச்சாவடிக்கு நேரில் வந்து ஓட்டளிக்காமல் 'இ - மெயில்' மூலம் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்ட முறை வெற்றி அடைந்துள்ளதால் எதிர்கால தேர்தல்களுக்கு இது, ஒரு புதிய வழியை ஏற்படுத்தி தரும் என்ற கருத்து பரவலாகி வருவதாக கூறப்பட்டது.

இது குறித்து அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் கூறப்பட்டுள்ளதாவது: இ. மெயில் ஓட்டளிப்பு முறை 2020 அமெரிக்க தேர்தல் வரலாற்றில் மிகவும் தவறான மற்றும் மோசடியான தேர்தலாக அமைந்துவிடும். இது தேசத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். முறையாக பாதுகாப்புடன் நேரில் வந்து மக்கள் ஓட்டளிக்கும் வரை தேர்தலை தாமதப்படுத்தலாம். இவ்வாறு அவர் பதவிவேற்றியுள்ளார்.Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
30-ஜூலை-202023:58:22 IST Report Abuse
தல புராணம் பள்ளிக்கூடத்தை தொறக்கலாம், ஆபத்தில்லை.. ஆனா தேர்தல் நடத்த முடியாது.. ஆபத்து .. வேண்டுமானால் உங்க ஹவ்டி மோடி நண்பர் கிட்டே வாக்கு இயந்திரங்களை வெச்சி ஜெயிக்கிறது எப்படின்னு ஐடியா கொடுப்பார்.. அதுக்கு நீங்க தேர்தல் பத்திரம் கமிஷன் தரவேண்டி இருக்கும்.
Rate this:
Cancel
Krish - FREMONT,யூ.எஸ்.ஏ
30-ஜூலை-202021:07:15 IST Report Abuse
Krish தற்போது அமெரிக்காவில் முயற்சி செய்வது ஈ-மெயில் ஓட்டளிப்பு முறை அல்ல. இதற்கு பெயர் "தபால் வழி ஓட்டளிப்பு முறை". இந்த முறையில் ஒட்டு சீட்டுகள் அவரவர் வீட்டுக்கு அனுப்பப்படும். அதை அவர்கள் பூர்த்தி செய்து தபாலில் திருப்பி அனுப்ப வேண்டும். இதில் முறைகேடுகள் வருவத்திற்கு வாய்ப்பில்லை.
Rate this:
Cancel
Bismi - Cincinnati,யூ.எஸ்.ஏ
30-ஜூலை-202020:55:02 IST Report Abuse
Bismi இதற்கு அவருக்கு அதிகாரம் கிடையாது. காங்கிரஸ் மட்டும் தான் செய்யமுடியும். காங்கிரஸ் அப்படியே செய்தாலும், இவரோ பென்ஸோ சனவரி 20க்கு பிறகு பதவியில் இருக்க முடியாது. காங்கிரஸ் தலைவர் நான்சி பெலோசி தான் இடைக்கால குடியரசு தலைவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X