இந்தியா காற்றின் தரத்தை பற்றி கவலைப்படுவதில்லை - டிரம்ப் குற்றச்சாட்டு!

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

வாஷிங்டன்: இந்தியா, சீனா, ரஷ்யா ஆகியவை தங்கள் நாட்டு காற்றின் தரத்தை பற்றி கவலைப்படுவதில்லை, ஆனால் அமெரிக்கா காற்றை கவனிக்கிறது என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.latest tamil newsஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், மிட்லாண்ட் நகரில் உள்ள எண்ணெய் வயலில் எரிசக்தி குறித்து அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது: பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் நமது காற்றை நாம் கவனித்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறது. ஆனால் சீனா, இந்தியா, ரஷ்யா ஆகியவை தங்கள் நாட்டின் காற்றை பற்றி கவலைப்படுவதில்லை.

பல ஆண்டுகளாக நாம் மற்ற நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். ஆனால் தற்போது அமெரிக்காவுக்கு தான் முதலிடம். கடந்த நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவின் எரிசக்தி துறை தொடர்சியாக தாக்குதலை சந்தித்தது. நான் பதவியேற்றதும் அமெரிக்க எரிசக்தி துறை மற்றும் அதன் ஊழியர்களுக்கு எதிரான இடதுசாரிகளின் போரை தடுத்து நிறுத்தினேன். அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான கோடி டாலருக்கு வேட்டு வைத்த ஒருதலைபட்சமான பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகினேன்.


latest tamil news


இந்த ஒப்பந்தம் நம்மை போட்டியிட முடியாத நாடாக மாற்றியிருக்கும். வேலைவாய்ப்பை நசுக்கும் ஒபாமாவின் தூய மின்னாற்றல் திட்டத்தையும் ரத்து செய்தேன். இதனால் 70 ஆண்டுகளில் முதல் முறையாக நிகர எரிசக்தி ஏற்றுமதியாளர் ஆகியிருக்கிறோம். மேலும் உலகின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த இடத்தை நீண்ட காலம் தக்க வைப்பதற்கு திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கான அங்கீகாரங்களை 2050-ம் ஆண்டு வரை நீட்டித்து அறிவித்துள்ளோம். இவ்வாறு டிரம்ப் பேசியுள்ளார்

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
31-ஜூலை-202009:00:32 IST Report Abuse
 Muruga Vel அதெல்லாம் கிடக்கட்டும் ..சோப்பு போட்டு கை கழுவுற பழக்கம் இருக்கா ..
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
31-ஜூலை-202006:44:02 IST Report Abuse
natarajan s அதிக தொழில் மயமான நாடுகளின் GREENHOUSE GAS Emmission குறைக்க பட வேண்டும் என்று PARIS AGREEMENT சொன்ன பொது அது தங்களை பாதிக்கும் என்று வளர்ந்த நாடுகள் எதிர்த்தன . இந்தியா தனது GREENHOUSE காஸ் EMMISSION வெளியேற்றத்தையும் குறைக்க கட்டாயப்படுத்தப்பட்டது , அந்த நாடுகளை ஒப்பிடு செய்யும் பொது நமது நாட்டின் GREENHOUSE GAS வெளியீடு சற்று குறைவு இருப்பினும் கையெழுத்து போட்டு உள்ளது. அந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆனவுடன், UNO வில் அமெரிக்கா அதில் இருந்து வெளியேறப்போவதாக சொல்லி விட்டது. அங்கெல்லாம் பசுமை வீடு வாயுகள் வெளியீடு குறைக்க படவில்லை ஆனால் இந்தியா குறைக்க வேண்டும், இதை செய்ய நமது நாட்டின் பல தொழில் சாலைகளை மூடினால்தான் நடக்கும் ஏற்கனவே வேலை இல்லை அதில் தொழிற்சாலைகளை மூடினால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
31-ஜூலை-202001:06:55 IST Report Abuse
g.s,rajan India should use the Solar Power and should be self reliant, crude oil usage should be minimised but will USA allow to do this ???The Gulf countries will be very much affected if India reduce their Import of crude. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X