ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ரூ. 15 கோடி : முதல்வர் கெலாட் குற்றச்சாட்டு

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
Rajasthan, Horse-Trading Rates, political crisis, Ashok Gehlot's Theory,

ஜெய்ப்பூர்: ஆக. 14-ம் தேதி சட்டசபை கூட உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரம் பேசும் தொகை அதிகரித்து வருவதாக ராஜஸ்தான் காங். முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

தனக்கு பெரும்பான்மை உள்ளதை நிரூபிக்க சட்டசபையை கூட்ட வேண்டும் என முதல்வர் அசோக் கெலாட் விடுத்த கோரிக்கையை ஏற்று சட்டசபையை ஆக. 14-ம் தேதி கூட்ட கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா நேற்று இரவு ஒப்புதல் அளித்தார்.


latest tamil news



இதையடுத்து ஆட்சியை கைப்பற்றும் நோக்குடன் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு பேசும் குதிரை பேரம் சூடு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து முதல்வர் அசோக் கெலாட் கூறியது, ஆக.14 ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடரின் அறிவிப்புக்குப் பின் எம்.எல்.ஏ.க்களை விலை பேசும் "குதிரை பேர தொகை அதிகரித்து வருகிறது. ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ரூ. 15 கோடி என நிர்ணயிக்கப்பட்டு தற்போது முதல் தவணையாக ரூ. 10 கோடி வரை கைமாறியுள்ளது. இந்த குதிரை பேரத்தில் யார் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
31-ஜூலை-202011:49:30 IST Report Abuse
Bhaskaran மாதாஜியிடம் இல்லாத பணமா .இல்லேன்னாஅலை வரிசையில் சம்பாதிச்சவங்க கிட்டே கடன் வாங்கலாம் ஆபத்துகு பாவம் இல்லை
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
31-ஜூலை-202006:53:11 IST Report Abuse
Cheran Perumal பி எஸ் பி, எம் எல் ஏக்களை ஐம்பது கோடி கொடுத்து வாங்கியதில் ஏமாந்து விட்டோமே அவர்கள் இப்படி குறைவான தொகையை கொடுத்து வாங்குறாங்களே என்று வருத்தப்படுகிறார்.
Rate this:
Cancel
31-ஜூலை-202006:23:04 IST Report Abuse
ஆப்பு 15 ராசியான நம்பர் அவிங்களுக்கு... 15 லட்சம் அப்போது. 15 கோடி இப்போது. ஆனா, குடுத்திருக்க வாய்ப்பில்லை. குடுக்கற அளவுக்கு பணம் இருக்குன்னு சொல்லியிருப்பாங்க. எம்.எல்.ஏக்கள் வாயைப் பொளந்துக்கிட்டு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X