பொது செய்தி

இந்தியா

33 ஆண்டுகள் ஆங்கிலத்தில் பெயில் : கொரோனாவால் 51 வயதில் 10 ம் வகுப்பு பாஸ்

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

ஐதராபாத்:33 ஆண்டுகளாக10 ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் பெயிலாகி வந்த 51 வயது நபர் கொரோனா உபயத்தால் ஆல் பாஸ் ஆகி உள்ளார்.



latest tamil news



கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களும் 10 ம்வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆல் பாஸ் அளித்துள்ளது. அதே நேரத்தில் பிளஸ் 1-ல் எந்த குரூப் கிடைக்கும் என்பதில் மாணவர்களுக்கு குழப்பம் நீடிக்கிறது. அதே நேரத்தில் 33 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் பெயிலாகி வந்த ஒருவர் இந்த கொரோனா உபயத்தால் ஆல் பாஸ் ஆகி மகிழ்சியில் திளைத்துவருகிறார் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 51 வயது நபர்.

தெலுங்கானா மாநிலம் ஐ தராபாத்தை சேர்ந்தவர் நூருதீன் (51). இவர் கடந்த 1987 ம் ஆண்டு 10 ம் வகுப்பு பொது தேர்வை எழுத துவங்கினார். அப்போது எழுதி தேர்வு முடிவில் ஆங்கிலத்தில் பெயிலாகி தேர்வில் தோல்வியடைந்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதி போதும் பாஸ் ஆவதற்கு தேவையான 35 மார்க்குக்கு பதிலாக 33,34 என பெற்று தோல்வியையே தழுவிவந்தார்.


latest tamil news



இந்தாண்டும் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்த போது அனைத்து பாடங்களையும் எழுத வேண்டும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். அதனை ஏற்று அனைத்து பாடங்களுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் செலுத்தி விட்டு தேர்வு எழுதும் தேதிக்காக காத்திருந்தார். ஹால் டிக்கெட்டும் வந்து விட்டது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு10 ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் ஆல் பாஸ் என தெலுங்கானா மாநிலம் அறிவித்தது. இதனையடுத்து நூரூதினும் ஆல் பாஸ் ஆனார். இதனையடுத்து முதல்வர் சந்திரசேகரராவிற்கு நன்றி என கூறி உள்ளார். நாட்டிலேயே முதன்முறையாக 10 ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என அறிவித்தவர் முதல்வர் சந்திரசேகரராவ்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
01-ஆக-202010:12:13 IST Report Abuse
Nallavan Nallavan சம்சாரம் அது மின்சாரம் படம் நினைவுக்கு வருகிறது ............
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
31-ஜூலை-202019:32:06 IST Report Abuse
தமிழ்வேல் கொரோனா இப்போதைக்குப் போராபோலத் தெரியல......
Rate this:
Cancel
Devaraju -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-202007:02:29 IST Report Abuse
Devaraju வாழ்த்துக்கள் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X