கேரள தங்க கடத்தலை வெளிக்கொண்டு வந்த அதிகாரி 'டிரான்ஸ்பர்'

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
kerala gold case, Customs officer, transferred, gold smuggling case, கேரளா

திருவனந்தபுரம்: கேரள அரசியலில் புயலை கிளப்பிய தங்க கடத்தல் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்த அதிகாரி, நாக்பூருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்சின் துாதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, துாதரகத்தில் பணியாற்றி வந்த சரித், முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ், அவருடைய கூட்டாளி சந்தீப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில், முதல்வரின் முதன்மை செயலர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை செயலராக இருந்த, சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து, அவர் இந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.


latest tamil news



இந்நிலையில், தங்க கடத்தல் விவகாரத்தை, வெளிக்கொண்டு வந்த, சுங்கத்துறை அதிகாரி, அனிஸ் பி.ராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் விமான நிலைய சுங்கத்துறையின் துணை கமிஷனராக இருந்த அவர், தற்போது நாக்பூருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது வழக்கமான பணியிட மாற்றம் என சுங்கத்துறை விளக்கமளித்த போதும், இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
03-ஆக-202012:41:40 IST Report Abuse
Sridhar இந்தமாதிரியான போட்டோக்களில் பிரச்சனை என்னவென்றால், யார் போலீஸ் யார் குற்றவாளின்னு தெரியாது. குற்றவாளிகளும் கம்பீரமாக போஸ் கொடுப்பார்கள்.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஆக-202012:59:09 IST Report Abuse
Tamilan இந்த தங்க கடத்தலுக்கும் , உலகளாவிய கடத்தல்காரர்களுக்கும் , மாநிலத்தில் உள்ள இந்திய அரசியல் சட்டத்தில் உள்ளவர்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது . அதனால்தான் இபப்டி ஒரு தகிடுதத்தம் . ஏன் ஐநாவில் உள்ளவர்களுக்கே இவர்களுடன் தொடர்பிருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் தான் , மற்றமதவாத நாடுகளின் பணத்தை நம்பி இருக்கும் இந்திய அரசிய சட்ட அரசுகள், சரியான விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்க முடியாது . வழக்கம் போல் எந்த ஒரு உலக நாட்டையும் போல் அரசியலுக்காகவும் , தம்பட்டம் அடித்து கொள்வதற்காக மட்டுமே எதையாவது செய்து விளம்பரம் செய்து கொண்டிருப்பார்கள் . கடத்தல்காரர்கள் , பயங்கரவாதிகளுக்கு சவால் விடும் திறன் உலகில் எந்த அரசுக்கும் இல்லை .
Rate this:
Cancel
Vellai Durai Ram - chennai,இந்தியா
31-ஜூலை-202010:12:41 IST Report Abuse
Vellai Durai Ram ஆளும் கட்சியின் முக்கிய புள்ளிகளையும் முதலமைச்சரியும் நேரடியாக சிக்கவைத்துள்ள இந்த வழக்கினால் இடதுசாரிகளின் கோபப்பார்வை இவரின்மீது படாமலிருக்க செய்த ஏற்பாடாக இருக்கலாம் .அல்லது கொடூர குணம்படைத்த அரசியல் எதிரிகளை நிர்மூலமாக்கும் எண்ணம்கொண்ட கம்ம்யூனிஸ்டுகளின் கோப பார்வையில் படாமல் எஸ்கேப் ஆவதற்கான வழியாக கூட இருக்கலாம் . எது எப்படியோ அந்த கேஸ் தற்போது என் ஐ எ விடம் உள்ளது அதனால் எந்த பிரச்னையும் இவருக்கு இல்லை என்பதே உண்மை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X