சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

பா.ம.க., நிறுவனர், ராமதாஸ்: தமிழகத்தில், 21 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. கடந்த, ௫ ஆண்டுகளாக, அவற்றில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த கல்வியாளர்கள், துணைவேந்தர்களாக நியமிக்கப்படவில்லை. தகுதியானவர்கள் ஏராளமாக, இருந்தும் புறக்கணிப்பு தொடர்கிறது. உள்ளூரில், வன்னியர் சமுதாயத்தில் தகுதியான பேராசிரியர்கள் இருந்தும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதுவா சமூக நீதி? இந்த அநீதி முடிவுக்கு வருவது எப்போது?

'டவுட்' தனபாலு: ஊசி போடும் டாக்டருக்கு படித்த நீங்களே இப்படி, படிப்பை குறைத்து மதிப்பிடலாமா... படிப்பும், திறமையும் பெரிதா, ஜாதி பெரிதா... இப்படி நீங்கள் குறுகிய வட்டத்திற்குள் யோசிப்பதால் தான், தமிழக அரசியலில் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் போயிற்றோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!

***

உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி: கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நவீன மருத்துவ நோய் தடுப்பு முறைகளுடன், சித்த மருத்துவ குழு வழங்கியுள்ள, நம் தமிழ் பாரம்பரிய வழிமுறைகளையும், பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

'டவுட்' தனபாலு: கொரோனாவுக்கு, ஆங்கில மருத்துவத்தில் மருந்து இல்லை; நோய் தானாக குணமானால் தான் உண்டு. ஆனால், நம் சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன; நோய் குணமாகிறது. பிறகு ஏன், நம் சித்த மருத்துவ மையங்களை, தமிழக அரசு அதிக அளவில் திறக்கவில்லை; பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆங்கில மருத்துவம் படுத்து விடும் என்ற அச்சமா என்ற, 'டவுட்' நடுநிலையாளர்களுக்கு வருகிறது.

***

பத்திரிகை செய்தி: இட ஒதுக்கீடு தீர்ப்பு தொடர்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டிய முக்கிய கோரிக்கைகள் குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட, ௧௩ கட்சிகளின் தலைவர்களிடம், தொலைபேசி வாயிலாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பேசி, ஆதரவு திரட்டினார்.

'டவுட்' தனபாலு: கொரோனா பீதியில் ஆழ்ந்திருக்கும் பிற மாநில கட்சித் தலைவர்கள், தி.மு.க.,வை அப்படியே மறந்து விடக் கூடாது என்பதற்காகவும், தேசிய அளவில் நாங்கள் பெரிய கட்சியாக்கும் என, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்.,சுக்கு பயங்காட்டவும் தான், இந்த நடவடிக்கையில் ஸ்டாலின் இறங்கியிருப்பாரோ என்ற, 'டவுட்' தமிழக அரசியல் பார்வையாளர்களுக்கு வலுத்துள்ளது!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
31-ஜூலை-202005:52:19 IST Report Abuse
D.Ambujavalli சித்தா மருத்துவம் சில நூறு, ஆயிரங்களிலேயே குணப்படுத்துவது அரசுக்குத் தெரியாதா? தனியார் மருத்துவமனைகளுக்கு அளவற்ற சுதந்திரம் கொடுப்பது, பல மருத்துவ மனைகள் அவர்கள் , அவர்களின் பினாமிகளுக்கு உரியவை காசு கொட்டும் அவற்றைத்தானே ஊக்கப்படுத்துவார்கள் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X