பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் ஒரே நாளில் 3,793 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நாளில் மொத்தம் 3,793 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்.இதையடுத்து அங்கு கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46,694 ஆக உயர்ந்துள்ளது. இதன் படி கொரோனா பாதித்தவர்களில் மொத்தம் 39 சதவீதம் பேர் குணமடைந்தனர். மாநிலத்தில் மொத்தம் 69,700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



latest tamil news



கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக அங்கு 6,128 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,632 ஆக உயர்ந்துள்ளது. . ஒரே நாளில் மேலும் 83 பேர் கொரோனாவுக்கு பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 2,230 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பெங்களூருவில் மட்டும் 2,233 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 22 பேர் கொரோனாவால் பலியானதைத் தொடர்ந்து அங்கு பலி எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது.


latest tamil news



மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, ' ஊரடங்கினால் கொரோனா பரவலை கட்டுப்படுத்திவிட முடியாது. பொது மக்கள் முகக்கவசம் மற்றும் சமூகவிலகலை கடைப்பிடிப்பதன் மூலமாகத்தான் கொரோனாவை தடுக்க முடியும். தமிழகம் மற்றும் மஹாராஷ்டிராவிலிருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வந்ததன் காரணமாக கர்நாடகாவில் தொற்று அதிகரித்துள்ளது' இவ்வாறு அவர் கூறினார்

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
31-ஜூலை-202009:07:54 IST Report Abuse
Chandramoulli குற்றம் குறை சொல்வதை ஆரம்பித்து விட்டார் முதல்வர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X