சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

பொதுநலத்தில் சுயநலத்தை கலந்த, 'மாஜி' அமைச்சர்!

Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
''தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி எச்சரிக்கை குடுத்திருக்காருல்லா...'' என, பேப்பரை மடித்தபடியே, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''மதுரையில, ஆவின் மொத்த பால் குளிர்விப்பான் மையங்கள்ல நிறைய முறைகேடுகள் நடந்திருக்கு... ஆவின் கமிஷனர் வள்ளலார் உத்தரவுப்படி, இதை, சென்னை பால்வளத் துறை அதிகாரி அலெக்ஸ் ஆய்வு
 பொதுநலத்தில் சுயநலத்தை கலந்த, 'மாஜி' அமைச்சர்!

''தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி எச்சரிக்கை குடுத்திருக்காருல்லா...'' என, பேப்பரை மடித்தபடியே, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''மதுரையில, ஆவின் மொத்த பால் குளிர்விப்பான் மையங்கள்ல நிறைய முறைகேடுகள் நடந்திருக்கு... ஆவின் கமிஷனர் வள்ளலார் உத்தரவுப்படி, இதை, சென்னை பால்வளத் துறை அதிகாரி அலெக்ஸ் ஆய்வு பண்ணி, கண்டுபிடிச்சிட்டாரு வே...

''இது சம்பந்தமா, நாலு பேரை, 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாவ... கமிஷனரின் துரிதமான நடவடிக்கை, 'தினமலர்' பேப்பர்ல வந்துச்சு... இந்த செய்தி கட்டிங்கை, தமிழகம் முழுக்க இருக்கிற, ஆவின் பொது மேலாளர்கள், 'வாட்ஸ் ஆப் குரூப்'ல, கமிஷனர் போட்டிருக்காரு வே...

''அது மட்டுமில்லை... 'குளிர்விப்பான் மைய பொறுப்பாளர்கள், இனியாவது எச்சரிக்கையா இருந்து, பாலை கொள்முதல் செய்யணும்... தப்புத் தண்டா நடந்தா, மதுரை மாதிரி, மற்ற ஊர்கள்லயும் இந்த மாதிரி நடவடிக்கை பாயும்'னு எச்சரிக்கையும் குடுத்திருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''கூடுதல் ஆசிரியர்கள் தேவையில்லைன்னு கடிதம் குடுத்தும், நடவடிக்கை இல்லைங்க...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார், அந்தோணிசாமி.

''எந்த ஊர் விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''சென்னை பாரிமுனையில, கன்னிகா பரமேஸ்வரி கோவிலின் டிரஸ்ட் சார்புல, அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்படுதுங்க... ''இங்க, நிறைய ஆசிரியர்கள் வேலை பார்க்கிறாங்க... இவங்கள்ல பலர், வேலையில்லாம சும்மாவே இருந்து, மாசா மாசம், சம்பளம் வாங்கிட்டு இருக்காங்க...

''ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு இவங்களை மாத்தினா, உபயோகமா இருக்கும்னு, பள்ளி நிர்வாகம் தரப்புல, 'கூடுதல் ஆசிரியர்களை எடுத்துக்கங்க'ன்னு, மாவட்ட கல்வி அதிகாரிக்கு ரெண்டு முறை, சரண்டர் கடிதம் குடுத்தும், நடவடிக்கை இல்லைங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''பொது பிரச்னைக்கு கோரிக்கை வச்சு, தன் பிரச்னைக்கும் தீர்வு தேடறார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், குப்பண்ணா.

''புத்திசாலியான அந்த அரசியல்வாதி யாரு வே...'' என, பட்டென கேட்டார், அண்ணாச்சி.

''தி.மு.க., முன்னாள் அமைச்சர் துரைமுருகன், ஊரடங்கால, ஏலகிரி மலையில இருக்கற தன் கெஸ்ட் ஹவுஸ்ல, ஓய்வுல இருக்கார்... சமீபத்துல, அங்க இருந்தே, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் ஓய்...''அதுல, 'காட்பாடி சட்டசபை தொகுதி வழியாக செல்லும், கடலுார் - சித்துார் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி, உயர் கோபுர மின் விளக்குகள் அமைச்சு குடுக்கணும்...

சாலையின் இரு புறமும் பயணியர் நிழற்குடை அமைச்சு தரணும்'னு கேட்டிருந்தார் ஓய்...''இது, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கோரிக்கையா தெரிஞ்சாலும், இந்த வழியில தான், துரைமுருகனுக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரி இருக்கு... இப்ப, அந்தப் பகுதி ராத்திரி நேரத்துல, கும்மிருட்டா இருக்கு...

''இதனால, அங்க உயர்கோபுர மின் விளக்குகளை அரசாங்கம் அமைச்சிட்டா, இவரது கல்லுாரி பகுதி, 'பளீர்' வெளிச்சமாகிடும்... அங்க படிக்கற மாணவ - மாணவியருக்கும், நிழற்குடை கிடைச்சிடும்னு, அ.தி.மு.க.,வினர் சொல்றா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
31-ஜூலை-202016:29:16 IST Report Abuse
Baskar ஏலகிரியில் எலி ஒன்று ... ஓடுகிறதென்று. தனக்கு காரியம் ஆகா வேண்டும் என்றால் ... பரவாயில்லை என்று கட்டி பிடித்து கொள்வார் இந்த துறை.
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
31-ஜூலை-202010:42:58 IST Report Abuse
மூல பத்திரம் திராவிடர்கள் எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணுதானே. வெளியில் தான் பல ரூபங்கள். உள்ளே ஒண்ணுதான்
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
31-ஜூலை-202008:25:14 IST Report Abuse
Chandramoulli தி மு க வின் சகுனி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X