காங்., - எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை

Updated : ஆக 01, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Congress,Sonia Gandhi,காங்கிரஸ்,சோனியா,சோனியா காந்தி

புதுடில்லி : பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர், அடுத்த மாதம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, காங்கிரஸ் ராஜ்யசபா, எம்.பி.,க்களுடன், சோனியா, நேற்று ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பாதிப்பு, அதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை, ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு ஆகியவை குறித்து, காங்கிரஸ் ராஜ்ய சபா, எம்.பி.,க்களுடன், கட்சி தலைவர் சோனியா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும், பொருளாதார பாதிப்பு குறித்தும், எம்.பி.,க்கள் கவலை தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில், காங்., மூத்த தலைவர்கள் அந்தோணி, அகமது படேல், குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, மல்லிகார்ஜுன கார்கே, அம்பிகா சோனி, சிதம்பரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர், அடுத்த மாதம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, காங்கிரஸ் லோக்சபா எம்.பி.,க்களுடன், சோனியா சமீபத்தில் ஆலோசித்தார். அதைத் தொடர்ந்து, தற்போது ராஜ்யசபா எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.


மருத்துவமனையில் சோனியா அனுமதி

டில்லி கங்காராம் மருத்துவமனையில், காங்கிரஸ் தலைவர் சோனியா, நேற்று அனுமதிக்கப்பட்டார். இது பற்றி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா, டில்லி கங்காராம் மருத்துவமனையில், நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவப் பரிசோதனைகள் முடிந்ததும், அவர் வீடு திரும்புவார்.இவ்வாறு காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
31-ஜூலை-202016:43:46 IST Report Abuse
Endrum Indian தண்டம் என்ன சொல்லணும் ஒனக்கு???நீ என்ன பண்ணுவாய் அதை வைத்து???இப்போ கொரோன பற்றி ஆலோசனை???அதுக்குத்தான் சொல்றது கொஞ்சமாவது படிச்சிருந்தான்னா அரசியல் வாழ்க்கை நடைமுறை தெரியும்
Rate this:
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
31-ஜூலை-202015:13:30 IST Report Abuse
Mithun ராஹுலை அடுத்த தலைவராக போட சிபாரிசு செய்யவும். அப்பத்தான் காங்கிரஸ் கூடிய விரைவில் காணாமல் போகும்.
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
31-ஜூலை-202013:45:53 IST Report Abuse
s.rajagopalan கு டு .. குடு கிழவர்களுடன் ஆலோசனை.. வெளங்கிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X