பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement
ஜூலை, 31, 1996மியான்மரில், பெகு மாவட்டம், சுவண்டி என்ற சிற்றுாரில், 1920 செப்., 29ம் தேதி பிறந்தவர், அரங்க.சீனிவாசன். இவரது தாய் மங்கம்மாள், நேதாஜியின், இந்திய தேசிய ராணுவ படையின் வீராங்கனை. சீனிவாசன், இளம் வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார். பரிபூரணானந்த சுவாமிகளிடம், தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். 1942-ல், இரண்டாம் உலகப்போர் காரணமாக, மியான்மரில் இருந்து,
இதே நாளில் அன்று


ஜூலை, 31, 1996

மியான்மரில், பெகு மாவட்டம், சுவண்டி என்ற சிற்றுாரில், 1920 செப்., 29ம் தேதி பிறந்தவர், அரங்க.சீனிவாசன். இவரது தாய் மங்கம்மாள், நேதாஜியின், இந்திய தேசிய ராணுவ படையின் வீராங்கனை. சீனிவாசன், இளம் வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார். பரிபூரணானந்த சுவாமிகளிடம், தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார்.

1942-ல், இரண்டாம் உலகப்போர் காரணமாக, மியான்மரில் இருந்து, நடைபயணமாகவே, இந்தியா வந்தார். கோல்கட்டாவில் சில காலம் வாழ்ந்தவர், பின் தமிழகம் வந்து, திண்டுக்கல் அருகே, கோவிலுாரில் வாழ்ந்து வந்தார். தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும், புலமை பெற்றிருந்தார்.

இவரது, 'மனித தெய்வம் காந்தி காதை' என்ற நுால், ஐந்து காண்டங்கள், 5,183 பாடல்களை கொண்டது. 40-க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ளார். இவரது நுால்கள், கல்லுாரிகளில் பாடங்களாக உள்ளன. 1996 ஜூலை, 31ம் தேதி இயற்கை எய்தினார்.

அரங்க.சீனிவாசன் காலமான தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X