'சிவப்பு பயங்கரவாதத்தின் இருண்ட தருணம் : தைவான் குற்றச்சாட்டு

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

தைபே: ஹாங்காங் மக்கள் மீதான அடக்குமுறையை சீனாவும், சீன ஆதரவு ஹாங்காங் அரசும் கைவிட வேண்டுமென தைவான் ஆளும் கட்சியான ஜனநாயக முற்போக்கு கட்சி வலியுறுத்தியுள்ளது.latest tamil newsஉலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, சீன அரசு, ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின் கீழ், ஜனநாயகத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்வோர் உள்ளிட்டோரை தேசத்துரோக குற்றச்சாட்டில் சீனாவுக்கு ஆதரவான ஹாங்காங் அரசு கைது நடவடிக்கை எடுத்து வருகிறது. சீனாவின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டங்களும் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஜனநாயகத்தின் குரலை நசுக்கும் வகையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 12 பேரை தகுதிநீக்கம் செய்து ஹாங்காங் அரசு உத்தரவிட்டுள்ளது. ஹாங்காங்கில் மேலும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தைவான் ஆளும் கட்சியான ஜனநாயக முற்போக்கு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஹாங்காங்கின் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது. சிவப்பு பயங்கரவாதத்தின் இருண்ட தருணத்தை ஹாங்காங் வெளிப்படுத்தியுள்ளது. ஹாங்காங் மக்களின் சுதந்திரத்தை சீனா வரம்புமீறி பறிப்பதையும் ,பயங்கரவாத ஆட்சியை உருவாக்கும் நோக்கத்தை உலகம் இப்போது தெளிவாகக் காணலாம் 'இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news
தைவானை தனது ஒருங்கிணைந்த பகுதியாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற தைவான் அதிபர் சாய் இங் வென் ,சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
31-ஜூலை-202013:02:36 IST Report Abuse
Sridhar தம்மாத்தூண்டு தைவானையே சீனாவால் ஒன்னும் செய்ய முடியல. இதுல இந்தியா கிட்ட தகராறு தேவையா? ஹிட்லர் பேராசையால் போன நூற்றாண்டில் அழிந்தான். அதே சரித்திரம் இப்போது சீனாவுக்கு திரும்புகிறது.
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
31-ஜூலை-202003:13:05 IST Report Abuse
naadodi முப்பது வருடம் முன் கிஸ்ஸிஞ்ஜரும் நிக்சனும் திறந்துவிட்ட சீனப் பொருளாதாரம் உலகலாவியதாய் இன்று விரிந்துள்ளது..இன்று உலகப் பேரரசில் ஒன்றாய் பணபலம், ராணுவ பலம் பெற்று பலநாடுகளில் தன் வியாபகத்தை பதித்துள்ளது.. இந்த ஊடுருவல் சக்திதான் இன்று சீனாவை வெல்ல முடியா ஒன்றாய் வார்த்து விட்டது. இதற்கு ஒரு சிறந்த மாற்று இந்தியாதான்...காலம் பதில் சொல்லும்..
Rate this:
Cancel
Krishna R -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-202001:49:51 IST Report Abuse
Krishna R எப்படி சீனாக்காரன் மட்டும் எல்லா பக்கங்களிலும் காய் நகர்த்துகிறான் அதுவும் சளைக்காமல்...
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
31-ஜூலை-202003:58:42 IST Report Abuse
NicoleThomsonindha kelvi enakkullum irukku, ivlo nadandhaalum avan eppadi...
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
06-ஆக-202013:26:07 IST Report Abuse
suresh kumarஅங்கே உள்குத்து செய்ய எதிர்க் கட்சி அரசியல் இல்லாதது காரணமாக இருக்கலாம். மக்களுக்கும் பயத்தின் காரணமாக எதிர்க்கும் சக்தி இல்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X