ராஜஸ்தான் முதல்வரின் நிலை 'திரிசங்கு!' கட்சி மாறிய எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ்

Updated : ஆக 01, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஜெய்ப்பூர் : கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு, கடந்தாண்டு ராஜஸ்தான் காங்கிரசில் சேர்ந்த, பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர் மற்றும் சபாநாயகருக்கு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தற்போது, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. இதனால், அம்மாநில முதல்வர் கெலாட், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்தவும் முடியாமல், ஆட்சியைத்
Rajasthan, Political Crisis, Ashok Gehlot, Kalraj Mishra,Governor, assembly session, முதல்வர், கெலாட், ஆளுநர்,கவர்னர்

ஜெய்ப்பூர் : கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு, கடந்தாண்டு ராஜஸ்தான் காங்கிரசில் சேர்ந்த, பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர் மற்றும் சபாநாயகருக்கு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தற்போது, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. இதனால், அம்மாநில முதல்வர் கெலாட், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்தவும் முடியாமல், ஆட்சியைத் தொடரவும் முடியாமல், 'திரிசங்கு' நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அவருக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, சச்சின் பைலட்டிடம் இருந்து, துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டன. இதற்கிடையே, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க, சபாநாயகருக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க, முதல்வர் கெலாட் முடிவு செய்தார். இது தொடர்பாக கெலாட் அரசு சார்பில் அனுப்பப்பட்ட, மூன்று கடிதங்களை, மாநில கவர்னர் கல்ராஜ் மிஷ்ரா திருப்பி அனுப்பினார். இதன்பின், நேற்று முன்தினம் மாலை, 'கொரோனா உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்க, சட்டசபை கூட்டத்தை, ஆக., 14ம் தேதி முதல் கூட்ட வேண்டும்' எனக் கோரி, கவர்னருக்கு, அரசு சார்பில், நான்காவது முறையாக கடிதம் அனுப்பப்பட்டது.

இந்தக் கடிதத்தில், சட்டசபையில், நம்பிக்கை தீர்மானம் கொண்டு வருவது பற்றி, எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதையேற்று, சட்டசபை கூட்டத்தை, 14ம் தேதி முதல் நடத்த, கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.'பிளாஷ்பேக்!'ராஜஸ்தான் சட்டசபைக்கு, 2018ல் தேர்தல் நடந்தது. இதில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், ஆறு பேர், எம்.எல்.ஏ.,க்களாக வெற்றி பெற்றனர். கெலாட் அரசுக்கு, பகுஜன் ஆதரவு அளித்து வந்தது.

இதற்கிடையே, கடந்த ஆண்டு செப்டம்பரில், பகுஜனின் ஆறு எம்.எல்.ஏ.,க்களும் காங்கிரசில் இணைந்தனர். இவர்கள் மீது, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுஜன் மற்றும் பா.ஜ., சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், பி.சி.ஜோஷி, அவர்களை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களாக அங்கீகரித்தார்.

இந்நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், நேற்று முன்தினம், பகுஜன் சமாஜ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'காங்கிரசில் இணைந்த, ஆறு எம்.எல்.ஏ.,க்கள் மீதும், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. இதேபோன்ற ஒரு மனுவை, பா.ஜ., - எம்.எல்.ஏ., திலாவர், ஏற்கனவே தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை விசாரணைக்கு நேற்று ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் கேட்டு, சபாநாயகர் ஜோஷி, சட்டசபை செயலர் மற்றும் ஆறு எம்.எல்.ஏ.,க்களுக்கும், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. வரும், 11ம் தேதிக்குள் பதில் அளிக்கவும், அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


சட்டசபை கூட்டம்


சட்டசபை கூட்டம், வரும், 14ம் தேதி துவங்க உள்ள நிலையில், இந்த நோட்டீஸ், அசோக் கெலாட் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆறு எம்.எல்.ஏ.,க்களும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து, ஆட்சி கவிழ்ந்து விடும். இதற்கிடையே, சச்சின் பைலட் போர்க்கொடி துாக்கியதிலிருந்து, கெலாட் ஆதரவு காங்., - எம்.எல்.ஏ.,க்கள், ஜெய்ப்பூரில், நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஓட்டலில், அவர்களின் கூட்டம் நேற்று நடந்தது.

அதில் பேசிய முதல்வர் அசோக் கெலாட், ''ஆகஸ்ட், 14ம் தேதி வரை, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், ஓட்டலிலேயே தங்கியிருக்க வேண்டும். அமைச்சர்கள் மட்டும், தலைமைச் செயலகம் சென்று தங்கள் பணிகளை கவனிக்கலாம்,'' என்றார்.

இந்நிலையில், சச்சின் பைலட் உட்பட அவரை ஆதரிக்கும், 18 எம்.எல்.ஏ.,க்களும், ஹரியானா மாநிலம், மனேசரில், ஓட்டல் ஒன்றில் தங்கிஉள்ளனர். அவர்கள், 'வரும், 14ம் தேதி நடக்கவிருக்கும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்போம்' என, தெரிவித்துள்ளனர். எனினும், அவர்கள் எப்போது ஜெய்ப்பூர் திரும்புவர் என, தெரியவில்லை.


கெலாட் அரசு தப்பிக்குமா?


ராஜஸ்தான் சட்டசபையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை, 200. இதில், முதல்வர் கெலாட், தன் அரசுக்கு, 102 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சச்சின் பைலட் தரப்பினர், தங்களுக்கு, 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக தெரிவித்தாலும், 19 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காவிட்டால், அனைவரையும் பதவி நீக்கம் செய்வது எளிதாகி விடும்.

அவர்கள் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று, கொறடா உத்தரவை மீறி, அரசுக்கு எதிராக ஓட்டளித்தாலும், பதவி பறிபோகும். ஆனால், அதற்கு முன், அரசு கவிழ அதிக வாய்ப்புகள் உள்ளன.அதனால் தான், நம்பிக்கை ஓட்டெடுப்பு பற்றி, கெலாட், தன் கடிதத்தில் குறிப்பிடவில்லை என, கூறப்படுகிறது.

இது பற்றி சபாநாயகர் ஜோஷி கூறியதாவது: சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, கவர்னர் விரும்பினால், அது பற்றி, எங்களுக்கு தான், உத்தரவு பிறப்பிக்க வேண்டும். எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது; நாங்கள் எதற்காக நம்பிக்கை ஓட்டெடுப்பு கோர வேண்டும்? இவ்வாறு அவர் கூறினார்.

சச்சின் பைலட் தரப்பும், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, இதுவரை கோரவில்லை. ஆக., 14க்குள் மேலும், பல எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் தரப்புக்கு வருவர் என, சச்சின் பைலட் ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
31-ஜூலை-202011:06:32 IST Report Abuse
rajan_subramanian manian இந்த வருட முடிவிற்குள் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா காலி ஆகிவிடும்.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
31-ஜூலை-202013:42:26 IST Report Abuse
SridharGood if it happens....
Rate this:
Cancel
balasubramanian ramanathan - vadakupatti,இந்தியா
31-ஜூலை-202009:05:55 IST Report Abuse
balasubramanian ramanathan இந்திரா காந்தியால் அன்று நாடு முழுவதும் விதைத்த விதை இன்று மரமாகி பழங்கள் தர ஆரம்பித்துவிட்டன.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
31-ஜூலை-202008:28:11 IST Report Abuse
blocked user காங்கிரஸ் மாயாவதி கட்சி MLA க்களை திருடிவிட்டது (அதாவது குதிரை / கழுதை பேரம் முடிந்துவிட்டது) - அந்த தைரியத்தில் உடனே சட்டசபையை கூட்டவேண்டும் என்று கூவினார்கள். இப்பொழுது அதிலும் மண் விழுந்து விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X