இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை: யு.ஜி.சி.,

Updated : ஆக 01, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
UGC, Supreme Court, Final year Exam, semester exam

புதுடில்லி : 'பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை' என, உச்ச நீதிமன்றத்தில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் இறுதியில் இருந்து, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை.கல்லுாரிகளில், இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களுக்கு, கடைசி செமஸ்டர் தேர்வு, நடத்தப்படாமல் உள்ளது.

'வரும் செப்டம்பர் மாதத்திற்குள், இறுதி செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும்' என, பல்கலை, கல்லுாரிகளுக்கு உத்தரவிட்ட யு.ஜி.சி., அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. இதை எதிர்த்து, பல்வேறு பல்கலைகளில் படிக்கும், 31 மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவில், 'யு.ஜி.சி., வழிகாட்டுதல்கள் தன்னிச்சையாக உள்ளன. கொரோனா தொற்றுக்கு மத்தியில், தேர்வுகள் நடத்துவது, மாணவர்களின் உடல் நலத்துக்கு நல்லதல்ல' என, கூறியிருந்தனர்.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய, யு.ஜி.சி.,க்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில், யு.ஜி.சி., சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் கூறியிருப்பதாவது: இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்தால், அது மாணவர்களின் எதிர்காலத்தை, சரிசெய்ய முடியாத அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். செப்டம்பரில் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு, வேறு ஒரு தேதியில் எழுத, வாய்ப்பு வழங்கப்படும்.தேர்வுகள் நடத்த, நீதிமன்றம் புதிய காலக்கெடுவை தீர்மானிக்கக் கூடாது.

தேர்வுகளை ரத்து செய்த, மஹாராஷ்டிரா, டில்லி அரசின் முடிவுகள், யு.ஜி.சி.யின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறானது. மாநில அரசுகளிடம் கலந்தாலோசித்த பின்னரே, தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு, பிரமாணப் பத்திரத்தில், யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. விசாரணை இன்றும் தொடர்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
31-ஜூலை-202008:47:00 IST Report Abuse
vbs manian காலேஜ் உள்ளே புகுந்து எந்த தேர்வும் எழுதாமல் வெளியே வந்தால் வீட்டில் இருக்கும் நாய் கூட சீண்டாது.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
31-ஜூலை-202008:34:14 IST Report Abuse
blocked user நல்ல வேளை கரோனாவை காரணம் காட்டி படிப்பை இரத்துச் செய்யவில்லையே அது வரை பரவாயில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X