பொது செய்தி

இந்தியா

ஜி.எஸ்.டி., இழப்பீடு: மத்திய அரசு ஈடு செய்யாது

Updated : ஆக 01, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
GST,Goods and Services Tax,ஜிஎஸ்டி, இழப்பீடு, மத்திய அரசு, ஈடு செய்யாது

புதுடில்லி : மாநிலங்களின் ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிதியத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால் அதை மத்திய அரசு ஈடு செய்ய வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பு கூடுதல் வரி மூலம் அதற்கென உருவாக்கப்பட்டுள்ள நிதியம் வாயிலாக ஈடு செய்யப்படுகிறது. ஊரடங்கால் வரி வருவாய் குறைந்துள்ள நிலையில் இந்த நிதியத்தின் இருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதை ஈடு செய்வது குறித்து அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் மத்திய அரசு கருத்து கேட்டது. அதற்கு ஜி.எஸ்.டி. நிதியத்தின் பற்றாக்குறையை சட்டப்படி மத்திய அரசு ஈடு செய்ய முடியாது. மாநிலங்கள் நிதிச் சந்தையில் கடன் பெற்று சமாளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
31-ஜூலை-202021:10:28 IST Report Abuse
J.Isaac சிரிச்சி கழுத்தறுக்கிற வேலை. மண்குதிரை மத்திய அரசு
Rate this:
Cancel
31-ஜூலை-202015:51:53 IST Report Abuse
ஆப்பு ஜி.எஸ்.டி கலெக்ஷனிலிருந்துதான் உஜாலா, ஆயுஷ்மான் பாரத், கரீப் கல்யாண்னு மத்திய அரசு இலவசங்களை அள்ளிக் குடுக்குது. அதுல கைவெச்சா எகக்ஷனில் உதை வுழும். அதுக்கெல்லாம் போக பாக்கி இருந்தா தான் மாநில ஓசி திட்டங்களுக்கு.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
31-ஜூலை-202009:56:52 IST Report Abuse
ஆரூர் ரங் அன்பு -தஞ்சை, ஜி எஸ் டி வசூலில் உற்பத்தி மட்டுமல்ல நுகரும் மாநிலங்களின் பொருளாதாரமும் முக்கியம்தான். உபி பிஹார் போன்ற வடஇந்திய விவசாய மாநிலங்களில் தொழில் உற்பத்திக்கு வாய்ப்பு குறைவு. பெரும் உற்பத்தித் தொழில்களை அளவுக்கு மீறி அங்கு ஊக்குவித்தால் விவசாயம் பாழ்படும் .அவர்களுக்கு துறைமுகங்கள் அருகில்லாததால் ஏற்றுமதிக்கும் வாய்ப்பில்லை. எல்லை மாநிலங்களிலோ பாதுகாப்புக்கு பயந்து யாரும் முதலீடு போடுவதில்லை ..அவற்றோடு நம்மை ஒப்பிடக்கூடாது ஜி எஸ் டி நஷ்டஈட்டை எல்லா மாநிலங்களும் அங்கத்தவர்களாக உள்ள ஜி எஸ் டி கவுன்சில்தான் முடிவு செய்து கொடுக்கும். நஷ்டஈடு கொடுப்பதும் அதன் பொறுப்புதான் மத்திய அரசுக்கு எவ்வித பொறுப்புமில்லை. இப்போது நடப்பது உலகளாவிய பிரச்னை .நம்மிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளே பொருளாதார சீரழிவில் திண்டாடும்போது உற்பத்தித்துறையால் என்ன சாதிததுவிடமுடியும்? இத்தனை ஆண்டுகளாக ஜி எஸ் டி மூலம் முன்பைவிட அதிக வருமானமே பெற்றுவந்த மாநிலங்கள் பெரிடரின்போது வரும் கஷ்ட நஷ்டங்களையும் பங்கிட்டுக் கொள்வதுதான் நியாயம் செய்தில் குருபிடபட்டுள்ளது சட்ட நிபுணரின் கருத்துதான் .மத்திய அரசின் நேரடி நிலைபாடல்ல. மத்திய அரசும வரிவசூல் தொய்வால் பெருமளவு பாதிக்கபட்டுள்ள நேரத்தில் நெருக்கடி கொடுக்ககூடாது. இன்னும் அழுத்தம் கொடுத்தால் அதிக ரூபாய் நோட்டடித்து விநியோகம் செய்து ரூபாய் மதிப்பை அதல பாதாளத்துக்குதான் கொண்டுபோகமுடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X