பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஏழு நாட்களுக்கு பின் குறைந்தது கொரோனா

Updated : ஆக 01, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
TNCoronaUpdates,TNHealth,TNFightsCorona,Corona,TNAgainstCorona,TNGovt,coronavirus,TamilNadu,Covid19,StayHome, Quarantine,lockdown

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து வந்த நிலையில் ஏழு நாட்களுக்கு பின் நேற்று 5864 ஆக குறைந்துள்ளது. பாதிப்பு படிப்படியாக குறையும் என சுகாதாரத் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் 119 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இந்த ஆய்வகங்களில் நேற்று மட்டும் 59 ஆயிரத்து 437 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5864 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் 1175; செங்கல்பட்டில் 354; கன்னியாகுமரியில் 248; மதுரையில் 220; ராணிப்பேட்டையில் 272; தேனியில் 261 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருவள்ளூரில் 325; துாத்துக்குடியில் 220; திருநெல்வேலியில் 277; விருதுநகரில் 244 பேரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்த 53 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.மாநிலத்தில் 25.02 லட்சம் நபர்களிடம் 25.98 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அந்த பரிசோதனையில் இரண்டு லட்சத்து 39 ஆயிரத்து 978 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 98 ஆயிரத்து 767; செங்கல்பட்டில் 14 ஆயிரத்து 197; மதுரையில் 10 ஆயிரத்து 838; திருவள்ளூரில் 13 ஆயிரத்து 481 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது .கொரோனா பிடியில் இருந்து 5295 பேர் மீண்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 178 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

சில தினங்களில் இறந்தவர்களில் 97 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதில் 29ம் தேதி மட்டும் 45 பேர் இறந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை சென்னையில் 2092 பேர் உட்பட 3838 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இம்மாதம் 23ம் தேதியில் இருந்து 7000த்தை நெருங்கி வந்த தொற்று எண்ணிக்கை இரண்டு தினங்களாக குறைந்து வருகிறது. பாதிப்பு படிப்படியாக குறையும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
31-ஜூலை-202016:58:39 IST Report Abuse
R.Kumaresan தமிழ்நாட்டில் சென்னையில் ஊரடங்கு உத்தரவு போட்டு 3838 பேர் பலியாயியுள்ளனர் அதிகம்தான்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
31-ஜூலை-202013:09:02 IST Report Abuse
Visu Iyer சொல்லிட்டாங்க.. நம்பிட்டோம்... என மக்கள் இருந்து விட போகிறார்கள்.. பதினைந்துக்கு பிறகு மீண்டும் வரலாம்.. இந்த மாதம் தீவிரமாகும் என்று சொல்றாங்க.. ஆனால்.. குறையுது.. இன்னும் மூன்று நாளில் குறையும் என்று சொல்றாங்க.. கூடுது.. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால்... கூட்டி கழிச்சு பாருங்கள்.. கணக்கு சரியா வரும்.
Rate this:
Cancel
Perumal - Chennai,இந்தியா
31-ஜூலை-202010:17:11 IST Report Abuse
Perumal Why DMK is still not refuting by telling they have tested only lesser numbers.They will do nothing good for the people.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X