பொது செய்தி

தமிழ்நாடு

கொங்கு வேளாளர் மெட்ரிக் மாணவர்கள் அபார சாதனை

Added : ஜூலை 30, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், 33 பேர், 500 க்கு மேல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.திருப்பூர், அங்கேரிபாளையம், கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அசத்தியுள்ளனர்.தேர்வெழுதிய, 33 பேர், 500 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். 45 பேர், 450 க்கு அதிகமாகவும், 47 பேர், 400 க்கும் அதிகமாகவும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.மாணவி சஞ்சு, 578 மதிப்பெண் பெற்று முதலிடம். தர்ஷனாதேவி, 571 மதிப்பெண்; இரண்டாமிடம். மூன்றாமிடம், குமரகுருபன்; 564 மதிப்பெண். கணிணி பயன்பாடுகள் பாடத்தில் வசுந்தரா, கணக்குப்பதிவியலில் மகாலட்சுமி மற்றும் முத்துலட்சுமி ஆகிய மூவர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.தேர்வில் வெற்றி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளி தாளாளர் பெஸ்ட் ராமசாமி, செயலாளர் கோவிந்தப்பன், பொருளாளர் கந்தசாசமி, துணை தலைவர்கள் குப்புசாமி, முருகசாமி, இணை செயலர் துரைசாமி ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X