எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

இளைஞரணி ஆதிக்கத்தால் பலர் குமுறல்; திமுக.,வில் வெடிக்குது உட்கட்சி பூசல்

Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட தி.மு.க., அமைப்புகளில், இளைஞரணியினர் தலையீடும், ஆதிக்கமும் அதிகரித்துள்ளதால், உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.சென்னை மேற்கு மாவட்ட செயலர், ஜெ.அன்பழகன் மறைவுக்கு பின், அம்மாவட்ட பொறுப்பாளராக, சிற்றரசு நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தை எதிர்க்கும் வகையில், மயிலாப்பூர் பகுதி, தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'டுவிட்டர்' பக்கத்தில், 'வலிமை
DMK, Stalin, Udhayanidhi, திமுக, ஸ்டாலின், உதயநிதி

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட தி.மு.க., அமைப்புகளில், இளைஞரணியினர் தலையீடும், ஆதிக்கமும் அதிகரித்துள்ளதால், உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.

சென்னை மேற்கு மாவட்ட செயலர், ஜெ.அன்பழகன் மறைவுக்கு பின், அம்மாவட்ட பொறுப்பாளராக, சிற்றரசு நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தை எதிர்க்கும் வகையில், மயிலாப்பூர் பகுதி, தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'டுவிட்டர்' பக்கத்தில், 'வலிமை முக்கியமல்ல... என்ன தான் பட்டத்து யானையாக இருந்தாலும், யானை உஷாராக இல்லை என்றால்' என, கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், 'கிச்சன் கேபினட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி தந்தவர்களுக்கு, பதவி தரப்பட்டுள்ளது' என, கடுமையாக விமர்சித்துள்ளார்.மாவட்ட பொறுப்பாளர் நியமனத்தால் எழுந்த அதிருப்தி காரணமாக, மயிலாப்பூர் தி.மு.க., இரண்டாக உடைந்து, அ.தி.மு.க.,விற்கு ஓட்டம் பிடிக்கும் நிலை உருவாகி உள்ளது.

அதேபோல, மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசுவின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரவாயல் பகுதியை சேர்ந்த, ஆலப்பாக்கம் தி.மு.க., நிர்வாகி ஒருவர், தன் பதவியை ராஜினாமா செய்ய போவதாக மிரட்டியுள்ளார்.அதனால், தற்போது, மதுரவாயல் பகுதி, சென்னை மேற்கு மாவட்டத்தில் இருந்து பிரித்து, சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க.,வில் அடங்கிய, ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய, குன்றத்துார் ஒன்றியத்துடன் இணைக்க பேச்சு நடத்தப்பட்டுள்ளது.இதற்கும், ஆலந்துார் பகுதி நிர்வாகிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கெல்லாம், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி தான் காரணம் என, கட்சியினர் பகிரங்கமாக விமர்சிக்க துவங்கி உள்ளனர்.

ஜெ.அன்பழகனுக்கு பதிலாக, அம்மாவட்ட பொறுப்பாளராக, பகுதி செயலர் மதன்மோகனை நியமிக்கவே, ஸ்டாலின் விரும்பினார். மதன் மீது, எந்த குற்றச்சாட்டும் இல்லாததால், அவரை நியமிக்க திட்டமிட்டார்.ஆனால், உதயநிதியும், அவரது ஆதரவாளர்களும், அதை முறியடித்து, இளைஞரணியை சேர்ந்த சிற்றரசுவை, அப்பதவிக்கு கொண்டு வந்தனர்.

உதயநிதி தயவு இருப்பதால், அவரது அதிகாரம், இப்போதே கொடி கட்டிப் பறப்பதாக கூறப்படுகிறது. மா.செ., பதவிக்கு வந்த பின், செஞ்சி அருகே உள்ள தன் சொந்த ஊருக்கு சென்ற அவர், 20க்கும் மேற்பட்ட கார்கள் பின்தொடர, பலத்த பந்தா காட்டியுள்ளார்.

இதையெல்லாம் கண்டு கொள்ளாத உதயநிதி, திருநெல்வேலி மாநகர தி.மு.க., முக்கிய நிர்வாகியை மாற்றி விட்டு, அதே மாவட்டத்தை சேர்ந்த, இளைஞரணி மாநில நிர்வாகிக்கு, முக்கிய பதவி வழங்க திட்டமிட்டுள்ளாராம்.மாவட்ட கட்சி நிர்வாகத்தில், இளைஞர் அணி நிர்வாகிகள் தலையீடு அதிகமாகி வருவதால், எல்லா மாவட்டங்களிலும் உட்கட்சி பூசலும் அதிகரித்துள்ளது என, அறிவாலய வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kattus - chennai,இந்தியா
31-ஜூலை-202011:45:26 IST Report Abuse
kattus கம்பெனி லாபமா நஷ்டமா?
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
31-ஜூலை-202010:40:57 IST Report Abuse
mindum vasantham இளம் ரௌடியைகள் பலர் உருவாக்கி விட்டனர் மூத்த ரௌடியைகள்
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
31-ஜூலை-202010:28:27 IST Report Abuse
Thiagarajan Kodandaraman ... சீக்கிரம் நடக்கும் ...எல்லா உ பா எல்லாம் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X